MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அட்ராசக்க... உலகளவில் முதல் நாளே 100 கோடி வசூல்! எந்த ஹிந்தி படமும் நிகழ்த்தாத சாதனையை படைத்த 'பதான்'!

அட்ராசக்க... உலகளவில் முதல் நாளே 100 கோடி வசூல்! எந்த ஹிந்தி படமும் நிகழ்த்தாத சாதனையை படைத்த 'பதான்'!

ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியான 'பதான்' திரைப்படம், உலக அளவில் முதல் நாளிலேயே 100 கோடி வசூலை வாரி குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2 Min read
Author : manimegalai a
Published : Jan 26 2023, 04:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Shah Rukh Khan Pathaan

Shah Rukh Khan Pathaan

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் நேற்று வெளியான ஆக்சன் திரில்லர் திரைப்படமான 'பதான்' முதல் நாளிலேயே, இந்தியாவில் மட்டும் 54 கோடி வசூல் செய்த நிலையில், உலக அளவில் 100 கோடி வசூலித்துள்ளதாக வெளியாகி உள்ள தகவல் ஷாருக்கான் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.

27

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் கடைசியாக, கடந்த 2018 ஆம் ஆண்டு 'ஜீரோ' திரைப்படம் வெளியான நிலையில், இந்த படத்தை தொடர்ந்து... கடந்த நான்கு ஆண்டுகளாக ஷாருக்கான் நடிப்பில் எந்த திரைப்படமும் வெளியாகவில்லை. இந்நிலையில் பாலிவுட் பாஷாவான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் நடிப்பில், ரசிகர்களின் மிகப்பெரிய காத்திருப்புக்கு தீனி போடும் வகையில் ஜனவரி 25 (நேற்று) 'பதான்' திரைப்படம் வெளியானது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் மனோபாலா.! என்ன ஆச்சு? திரையுலகில் பரபரப்பு!

37

இந்த படத்தை ஷாருக்கானின் ரசிகர்கள் வழக்கம்போல்,  ஆட்டம், பாட்டம், என திரையரங்குகளில் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் அதிகாலை முதலே பிரமாண்ட வரவேற்பு கொடுத்தனர்.

47

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக, தொடர்ந்து 'பதான்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. அதே போல் இப்படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றும் ஹாலிவுட் தரத்துக்கு நிராகராக உள்ளதாகவும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

எங்கேயும் எப்போதும் பட நடிகர் ஷர்வானந்த் நிச்சயதார்த்தம் முடிந்தது! மணமகள் இவரா? புளியங்கொம்பை பிடித்த நடிகர்!

57

'பதான்' திரைப்படம் வெளியான முதல் நாளே, இந்திய அளவில் சுமார் 54 கோடி வசூல் செய்தகாக கூறப்பட்ட நிலையில், உலக அளவில் முதல் நாளிலேயே 100 கோடி வசூல் செய்த முதல் இந்தி திரைப்படம் என்கிற பெருமையை பெற்றுள்ளது.

67

மேலும் இன்று குடியரசு தினம் என்பதால் என்பதாலும், விடுமுறை நாள் என்பதாலும், இரண்டே நாட்களில் பதன் இந்தியாவில் மட்டுமே 'பதான்' திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூலை வாரி குவிக்கும் என சினிமா வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.

Sneha: சினேகா மகள் ஆத்யந்தா பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு வாழ்த்திய பிரபலங்கள்! போட்டோஸ்..!

77

இந்தப் படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ளார். வில்லனாக ஜான் ஆபிரகாம் நடித்துள்ளார். சிறப்பு வேடத்தில் சல்மான் கான் நடித்துள்ளார். இப்படம் டிக்கெட் முன்பதிவிலும் KGF படத்தின் சாதனையை முறியடித்துள்ளது குறிபிடித்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
பாடும் நிலா SPB-யின் தேன் குரல்.! கேட்பவர்களை மெய் மறக்க செய்யும் டாப் 10 சூப்பர் ஹிட் சாங்ஸ் லிஸ்ட் இதோ.!
Recommended image2
போடா டோமர் தலையா... நிலாவின் மெசேஜால் அப்செட் ஆன ராகவ் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Recommended image3
இதெல்லாம் உன் செட் அப் தானா? விஜயாவை சந்தேகப்பட்ட முத்து; கதறி அழும் மீனா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved