- Home
- Cinema
- Sreenidhi : மன அழுத்தத்தால் பாதிப்பு... மருத்துவமனையில் நடிகை ஸ்ரீநிதி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு..!
Sreenidhi : மன அழுத்தத்தால் பாதிப்பு... மருத்துவமனையில் நடிகை ஸ்ரீநிதி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு..!
Sreenidhi : மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகை ஸ்ரீதி, திடீரென தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

sreenidhi
சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளுக்கு மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளனர். அந்த வகையில் யாரடி நீ மோகினி, 7சி போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஸ்ரீநிதி. இவர் சமீபத்தில் நடிகர் சிம்பு தன்னை காதலிப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் சிம்பு வீட்டின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து தன்னுடன் சீரியலில் நடிக்கும் நடிகைகள் குறித்தும் பல்வேறு தகவல்களை வெளியிட்டார். குறிப்பாக அவருடன் யாரடி நீ மோகினி சீரியலில் நடித்த நக்ஷத்ரா, திருமணம் செய்துகொள்ள உள்ள நபர் நல்லவர் கிடையாது. அதையும் மீறி அவர் திருமணம் செய்தால் விஜே சித்ராவுக்கு ஏற்பட்ட நிலைமை தான் அவளுக்கும் ஏற்படும் என கூறினார்.
பின்னர் இதுகுறித்து விளக்கம் அளித்த நக்ஷத்ரா, ஸ்ரீநிதி கடும் மன அழுத்தத்தில் இருப்பதால் இதுபோன்று பேசி வருவதாக சொன்னார். இதையடுத்து மன அழுத்ததிற்காக சிகிச்சை பெற சென்னை புழல் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் ஸ்ரீநிதி கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கவுன்சிலிங்கும் கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகை ஸ்ரீதி, திடீரென தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்றிவிட்டதாகவும் கூறப்படுகிறது. மன அழுத்தத்திற்கான சிகிச்சைக்கு அவர் ஒத்துழைப்பு தர மறுப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்... ச்ச.. அனிருத் இப்படி செய்வார்னு எதிர்பார்க்கல - புலம்பித் தள்ளும் தனுஷ் ரசிகர்கள்