MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அட்ஜஸ்ட்மெட் பிரச்சனை எனக்கும் நடந்துருக்கு..! சீரியல் நடிகை லதா ராவ் ஓப்பன் டாக் !

அட்ஜஸ்ட்மெட் பிரச்சனை எனக்கும் நடந்துருக்கு..! சீரியல் நடிகை லதா ராவ் ஓப்பன் டாக் !

அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையால் பட வாய்ப்புகளை இழந்ததாக, சீரியல் நடிகை லதா ராவ் கூறியுள்ள பழைய பேட்டி ஒன்று தற்போது மீண்டும் பேசும் பொருளாக மாறி உள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Aug 03 2023, 03:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

சமீப காலமாகவே, திரை உலகில் பலர்  பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் கேட்கும், சில இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் பற்றி வெளிப்படையாக பேசுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் பல சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை லதா ராவ் ஒரு வருடத்திற்கு முன்பே அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினையால் பல பட வாய்ப்புகளை இழந்ததாக தெரிவித்துள்ளார்.

25

லதாராவ் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், போன்ற தென்னிந்திய மொழிகளிலும் பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து பிரபலமானவர். அதை போல் சின்னத்திரையிலும் மெட்டி ஒலி, செல்வி, திருமதி செல்வம், போன்ற சூப்பர்ஹிட் சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பை வெளிப்படுத்துவது லதா ராவின் சிறப்பு என கூறலாம். குறிப்பாக வில்லி கதாபாத்திரம் என்றால்... இவரின் பர்ஃபாமென்ஸ் வேற லெவலில் இருக்கும்.

சைடு போஸில் செம்ம அழகு..! புன்னகை பூவாக மாறி ரசிகர்களை கவரும் மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் போட்டோஸ்!

35

இவர் பிரபல சீரியல் நடிகர் ராஜ் கமலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் தன்னுடைய மகள்களான ராகா மற்றும் லாரா ஆகியோரை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வந்ததால் திரை உலகில் அதிகம் கவனம் செலுத்தாமல் இருந்து வந்தார். எனினும் அவ்வப்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் ராஜ் கமலும் சில படங்களில் ஹீரோவாக நடித்த நிலையில், அந்த படங்கள் எதுவும் வெற்றி பெறாததால் தற்போது சீரியலில் நடித்து வருகிறார்.

45

நடிப்பை தாண்டி கணவன் - மனைவி இருவரும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் ஒன்றையும்  இணைந்து நடத்தி வருகிறார்கள். அதே போல் டான்ஸ் ஸ்கூல் ஒன்றையும் இவர்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. லதா ராவ் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர், பேட்டி ஒன்றில் பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்வது குறித்து பேசி இருந்தார்.

ரீலில் வில்லன்... நிஜத்தில் சொக்க தங்கம்! 'குக் வித் கோமாளி' பரிசு தொகையை மைம் கோபி என்ன செய்தார் தெரியுமா?

55

இதுகுறித்து அவர் பேசி இருந்ததாவது, நடிகைகளை பொறுத்தவரை... சில நடிகைகள் பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்கிறார்கள். இந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினை மீடியா துறையில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும் இருக்கிறது. எனக்கும் இதுபோன்ற அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. இதனால் நான் பல பட வாய்ப்புகளை இழந்துள்ளேன். அந்த படம் மற்றும் இயக்குனர் பற்றி பேச விருப்பமில்லை என்றும் தெரிவித்த லதா ராவ்... அட்ஜஸ்ட்மென்ட் செய்து வாய்ப்பை பெறுவதும், அட்ஜஸ்ட்மென்ட் செய்யாமல் இருப்பதும் நடிகைகளின் தனிப்பட்ட விருப்பம் என தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே கார்.. ஒரே நிற உடை; எதைப் பற்றியும் கவலை இல்ல; மேரேஜ் ரிஷப்சனுக்கு ஜோடியாக வந்த விஜய் அண்ட் த்ரிஷா!
Recommended image2
ராசியில்லாத நடிகை என முத்திரை..ஷங்கர் கொடுத்த மிகப்பெரிய லைஃப்! ஒரே படத்தில் ஓவர்நைட் பிரபலம்!
Recommended image3
சிறையில் ரேவதி.. வெளியே சந்திரகலாவின் வன்மம்! கார்த்திக்கிற்கு 'எமன்' ஆகும் சாமுண்டீஸ்வரி - பகீர் திருப்பம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved