சைடு போஸில் செம்ம அழகு..! புன்னகை பூவாக மாறி ரசிகர்களை கவரும் மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் போட்டோஸ்!
தென்னிந்திய திரையுலகில், பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள், தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்ட லைக்குகளை குவித்து வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 'பேட்ட' படத்தின் மூலம் தமிழில், தன்னுடைய நடிப்புக்கு பிள்ளையார் சுழி போட்டவர் மாளவிகா மோகனன்.
இதைத்தொடர்ந்து யாரும் எதிர்பாராத விதமாக தன்னுடைய இரண்டாவது படத்திலேயே, தளபதி விஜய்க்கு ஜோடியானார். 'மாஸ்டர்' படத்தில் நடிக்க இவருக்கு கிடைத்த வாய்ப்பு ஜாக்பாட்டாகவே பார்க்கப்பட்ட நிலையில், தளபதி உடன் ஜோடி போட வேண்டும் என ஆசைப்பட்ட பல இளம் நடிகைகளை பொறாமை படவும் செய்தது.
ஒரே வாரத்தில் 1.2 மில்லியன் பார்வைகளைக் கடந்து... உலகளவில் சாதனை படைத்த மாமன்னன் !!
'மாஸ்டர்' படத்தில் விஜய்க்கு ஜோடி போட்டதன் மூலம், தளபதி ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட மாளவிகா மோகனன் மிக குறுகிய நாட்களிலேயே தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் கவனிக்கப்பட்ட நடிகையாக மாறினார்.
'மாஸ்ட'ர் படத்திற்கு பின்னர் தனுசுக்கு ஜோடியாக இவர் நடித்த 'மாறன்' திரைப்படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், தற்போது தமிழில் மிகவும் நிதானமாக தன்னுடைய திரைப்படங்களின் கதையை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் தங்கலான் படத்தில், காட்டுவாசி பெண்ணாக மாளவிகா மோகனன் நடிக்கிறார்.
திரையுலகில் அதிர்ச்சி..! நடு ரோட்டில் அனாதையாக இறந்து கிடந்த பாலா பட காமெடி நடிகர்!
இந்த படத்திற்காக ஒரு நாளைக்கு மட்டும் சுமார் 4 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை மேக்கப் போட்டு நடித்து நடித்ததாகவும் மாளவிகா தெரிவித்திருந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, போன்ற மொழி படங்களிலும், கவனம் செலுத்தி வரும் மாளவிகா அடிக்கடி சமூக வலைதளத்தில் கண்ணை கவரும் அழகில் கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது மிகவும் ஸ்டைலிஷான மாடர்ன் அவுட் பிட்டில்... சைடாக அமர்ந்தபடி விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். அதிலும் அவரின் சிரிப்பு கொள்ளை அழகு. இவரின் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர் ரசிகர்கள்.