திரையுலகில் அதிர்ச்சி..! நடு ரோட்டில் அனாதையாக இறந்து கிடந்த பாலா பட காமெடி நடிகர்!

தமிழ் சினிமாவில் பல படங்களில் சிறிய வேடத்தில் நடித்து பிரபலமான காமெடி நடிகர் மோகன் அனாதையாக நடு ரோட்டில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Bala movie actor mohan death

தமிழில் பல படங்களில், சிறிய காமெடி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகர் மோகன்,  வறுமை காரணமாக உயிரிழந்த சம்பவம், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சில நடிகர்கள் ஓரிரெண்டு படம் நடித்த உடனேயே, முன்னணி நடிகர்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் இன்னும் சிலருக்கோ பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும், அவர்களுக்கு திறமை இருந்தும், பெரிய அளவில் அவர்களால் திரையுலகில் வளர முடிவது இல்லை. 

Bala movie actor mohan death

ஹீரோயின்களை மிஞ்சும் அழகு..! பிக்பாஸ் கவினின் காதலி மோனிகா யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்!

இதற்காக தான், சினிமாவில் கொஞ்சம் அதிஷ்டமும் இருந்தால் தான் பிழைக்க முடியும் என கூறுவார்கள் அனுபவஸ்தர்கள்.இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் நடித்த அபூர்வ சகோததர்கள், இயக்குனர் பாலா இயக்கத்தில் ஆர்யா நடித்த 'நான் கடவுள்' போன்ற படங்களில் நடித்த காமெடி நடிகர் மோகன், வறுமையின் காரணமாக ஆதரவற்ற நிலையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர் சில வருடங்களாக மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் வசித்து வந்துள்ளார். ஆதரவற்ற நிலையில்... வறுமையில் இருந்த இவர், கிடைக்கும் உணவை வைத்து தன்னுடைய வாழ்க்கையை ஒட்டி வந்த நிலையில், நேற்று ரோட்டோரமாக இறந்து கிடந்துள்ளார். பின்னர் மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு பின்னர், அவரின் சொந்த ஊரான மேட்டூருக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios