ஹீரோயின்களை மிஞ்சும் அழகு..! பிக்பாஸ் கவினின் காதலி மோனிகா யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்!
நடிகர் கவின் தன்னுடைய நீண்ட நாள் காதலியான, மோனிகாவை திருமணம் செய்ய உள்ள தகவலை, அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டு நிலையில், தற்போது மோனிகாவின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
விஜய் டிவி தொலைக்காட்சியில், கனாக்காணும் காலங்கள் சீரியல் மூலம் ஒரு துணை நடிகராக அறிமுகமாகி, பின்னர் படிப்படியாக தன்னை தானே செதுக்கி கொண்டவர் கவின். அடுத்தடுத்து சில சீரியல்களில் நடித்தாலும், கவினுக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்தது என்றால்... அது, சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த வேட்டையன் கதாபாத்திரம் தான். அதிலும் இந்த சீரியலில் இவரின் காமெடியான பேச்சு மற்றும் நடிப்பு ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தது.
ஆனால் கவினின் ஆசை, வெள்ளித்திரையில் நடிகராக வேண்டும் என்பது தான், பீசா உள்ளிட்ட பல படங்களில், குட்டி குட்டி ரோலில் நடித்தது மட்டும் இன்றி, பட வாய்ப்புக்காக உதவி இயக்குனராகவும் சில காலம் பணியாற்றினார். இவர் ஹீரோவாக நடித்த 'நட்புன்னா என்னனு தெரியுமா' என்கிற படம் தோல்வியை சந்தித்த நிலையில்... பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.
Dear Movie: மணமகள் கெட்டப்பில் கேக் வெட்டி... 'டியர்' படப்பிடிப்பை நிறைவு செய்த ஐஸ்வர்யா ராஜேஷ்!
ஆரம்பத்தில் கவினுக்கு எதிர்மறையான விமர்சனங்களே குவிந்த நிலையில், பின்னர் அவரின் விட்டு கொடுக்கும் குணம் மற்றும் நல்ல மனசு இவருக்கு பல ரசிகர்களை பெற்று தந்தது. ஒருவேளை லாஸ்லியாவுக்காக பிக்பாஸ் வீட்டில் இருந்து 5 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறாமல் இவர் இருந்திருந்தால், முகேனுக்கு பதில் இவர் தான் டைட்டில் படத்தை பெற்றிருப்பார் என பலர் கூறியது குறிப்பிடத்தக்கது.
தற்போது தமிழ் சினிமாவில், தொடர்ந்து தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் கவின். அந்த வகையில்... கவின் நடித்த “லிஃப்ட்” மற்றும் “டாடா” திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. நடிகர் கவினுக்கென தனி ரசிகர் வட்டம் மட்டுமல்லாமல், தயாரிப்பு மற்றும் விநியோக வட்டாரத்திலும் இவரது மதிப்பு உயர்ந்துள்ளது. இதை தொடர்ந்து நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில், இசையமைப்பாளர் ராக் ஸ்டார் அனிருத் இசையில், ஒரு ரொமான்ஸ் படத்தில் நடித்துவருகிறார் கவின்.
அப்போ அதெல்லாம் சும்மாவா? நீண்ட நாள் காதலியை கரம்பிடிக்கும் கவின்! மணமகள் பற்றி வெளியான தகவல்!
இந்நிலையில் சமீபத்தில் கவின் திருமணம் குறித்த தகவல் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவியது. பின்னர் இன்று கவின் தரப்பில் இருந்து இதுகுறித்த அதிகார பூர்வ தகவலும் வெளியானது. அதன்படி... கவின் தன்னுடைய நீண்ட நாள் காதலியான மோனிகா என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும், அவர் தனியார்ப் பள்ளியில் பணியாற்றி வருவதாகவும் கூறப்பட்டது. மேலும் இவர்களின் திருமணம், இருவீட்டார் சம்மதத்துடன் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, தற்போது கவின் திருமணம் செய்து கொள்ள உள்ள பெண்னின் புகைப்படம் வெளியாகி படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. ஹீரோயினை மிஞ்சிய அழகில் மோனிகா இருக்கிறார். மேலும் ரசிகர்கள் பலரும் தொடர்ந்து கவினுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.