அப்போ அதெல்லாம் சும்மாவா? நீண்ட நாள் காதலியை கரம்பிடிக்கும் கவின்! மணமகள் பற்றி வெளியான தகவல்!
இளம் நடிகர் கவின் தன்னுடைய நீண்ட நாள் காதலியை திருமணம் செய்ய உள்ளதாக தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் நெடுந்தொடர் மூலம், துணை நடிகராக அறிமுகமானவர் கவின். தன் தனித்திறமை மூலம் படிப்படியாக தன்னை வளர்த்துக் கொண்டவர், திரைப்படங்களில் உதவி இயக்குநரானார். சினிமாவில் நடிகராகவும் கால் பதித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி வாய்ப்பு, அவரை உச்சத்தில் நிறுத்தியது. அவரது குணம் மற்றும் நல்ல மனம் மூலம் இளைஞர்களின் மனதில் பெரிய இடம்பிடித்தார். பின்னர் நாயகனாக தமிழ் சினிமாவில் ஜொலிக்க ஆரம்பித்தார்.
சமீபத்தில் அவர் நாயகனாக நடித்த “லிஃப்ட்” மற்றும் “டாடா” திரைப்படங்கள் மிகப்பெரும் ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றன. நடிகர் கவினுக்கென தனி ரசிகர் வட்டம் மட்டுமல்லாமல், தயாரிப்பு மற்றும் விநியோக வட்டாரத்திலும் இவரது மதிப்பு உயர்ந்துள்ளது.
தற்போது நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில், இசையமைப்பாளர் ராக் ஸ்டார் அனிருத் இசையில், ஒரு ரொமான்ஸ் படத்தில் நடித்துவருகிறார் கவின். இப்படத்திற்கான எதிர்பார்ப்பு இப்போதே பெருமளவில் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இவரது திருமண அறிவிப்பு ரசிகர்களை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தனியார்ப் பள்ளியில் பணியாற்றி வரும் மோனிகா என்பவரை, கவின் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இருவீட்டார் சம்மதத்துடன் திருமணக் கட்டத்தை எட்டியுள்ளது. இவர்களின் திருமணம் அனைவரின் ஆசியுடன் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதை தொடர்ந்து ரசிகர்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அதே நேரம் நெட்டிசன்கள் சிலர், அப்போ பிக்பாஸ் வீட்டிற்குள் லாஸ்லியாவை உருகி உருகி காதலித்து எல்லாம் கண்டென்ட்டுக்கு தானா? என கேள்வி எழுப்பி வருவதையும் பார்க்கமுடிகிறது. கன்டென்ட் காதலியை ஃபைனலுக்கு அனுப்ப 5 லச்சம் ரூபாயுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதெல்லம் கொஞ்சம் டூ மச் தான்.