ஜி.வி.பிரகாஷ் குமார் - ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள, 'டியர்' படத்தின் படப்பிடிப்பு இன்று நிறைவடைந்ததை ஒட்டி படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.  

இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார்-ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “டியர்” . இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் துவங்க உள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முதன் முறையாக இணைந்து நடிப்பதால், ‘டியர்’ திரைப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியானதிலிருந்தே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கண்ட கழிசடைகளும் பேச ஆரம்பித்தால்.. விளைவு மிக மோசமாயிருக்கும்! நடிகர் ராஜ்கிரண் ஆவேச பதிவு!

மேலும் இந்த படத்தை Nutmeg Productions சார்பில் வருண் திரிபுரனேனி மற்றும் அபிஷேக் ராமிசெட்டி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்தை, 'செத்தும் ஆயிரம் பொன்’ படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

1500 ரூபாயில் துவங்கி.. இன்று எதிர்நீச்சல் சீரியலுக்கு மட்டும் மாரிமுத்து வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ப்ரீ புரொடக்‌ஷன் கட்டத்தில் திட்டமிட்டபடி படத்தின் படப்பிடிப்பு வெறும் 35 நாட்களில் முடிக்கப்பட்டுள்ளது. ‘டியர்’ படத்தின் படப்பிடிப்பு, சென்னை, இடுக்கி, குன்னூர் ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது, ​​போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ள நிலையில், படத்தின் ஆடியோ, டிரெய்லர் மற்றும் உலகம் முழுவதும் திரையரங்கு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன், காளி வெங்கட், இளவரசு, ரோகினி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம், ‘ப்ளாக் ஷீப்’ நந்தினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜெகதீஸ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ருகேஷ் படத்தொகுப்பை கவனிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.