திருமணமான 6 மாதத்தில் குட் நியூஸ் சொன்ன ‘பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகை
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து பிரபலமான கண்மணி மனோகரன் கடந்த ஆண்டு தொகுப்பாளர் அஸ்வத்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

Serial Actress Kanmani Manoharan Pregnant : விஜய் டிவியில் சக்கைப்போடு போட்ட சீரியல்களில் ஒன்று தான் பாரதி கண்ணம்மா. கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் 2023 வரை சுமார் 1000 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி சாதனை படைத்தது. விஜய் டிவியில் அதிக நாட்கள் ஓடிய சீரியல்களில் பாரதி கண்ணம்மா சீரியலும் ஒன்று. இந்த சீரியலில் அஞ்சலி என்கிற வில்லி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் கண்மணி மனோகரன். அவர் நடித்த முதல் சீரியலும் இதுதான். இந்த சீரியல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆன கண்மணி.
Serial Actress Kanmani Manoharan
பாரதி கண்ணம்மா சீரியல் ஹிட் ஆனதால் கண்மணிக்கு அடுத்ததாக ஜீ தமிழில் ஒளிபரப்பான அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியல் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சீரியலில் பிசியாக நடித்து வந்த அஞ்சலிக்கு கடந்த ஆண்டு திருமணம் ஆனது. இவர் தன்னுடைய காதலனான அஸ்வத்தை பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரம்பிடித்தார். கண்மணியின் கணவர் அஸ்வத் சன் டிவி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இதையும் படியுங்கள்... பாரதி கண்ணம்மா சீரியல் நடிகைக்கு கமுக்கமாக நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்... மாப்ளையும் டிவி பிரபலம் தானா?
Kanmani - Aswath
கண்மணி - அஸ்வத் ஜோடி திருமணமாகி 6 மாதம் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார். சிங்கப்பூர் சென்றுள்ள அவர்கள், அங்கு எடுத்த வீடியோ ஒன்றை பதிவிட்டு குட் நியூஸ் சொல்லி உள்ளனர். அதன்படி நடிகை கண்மணி கர்ப்பமாக இருக்கும் தகவலை இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். வயிற்றில் குழந்தையோடு கண்மணி நின்றுகொண்டிருக்க, உற்சாகம் பொங்க வந்து அவரின் வயிற்றில் முத்தமிட்டு தாங்கள் இருவரும் விரைவில் பெற்றோர் ஆக உள்ள தகவலை அறிவித்துள்ளார் அஸ்வத்.
Serial Actress Kanmani Manoharan Pregnant
கர்ப்பமாக இருக்கும் நடிகை கண்மணி மனோகரனுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. கண்மணி - அஸ்வத் ஜோடி திருமணமான பின் முதன்முறையாக வெளிநாடு சென்றுள்ளனர். அந்த முதல் ட்ரிப்பிலேயே அவர்கள் தாங்கள் கர்ப்பமாக இருக்கும் தகவலை அறிவித்துள்ளனர். அண்மையில் தான் இந்த ஜோடி சொகுசு கார் ஒன்றை வாங்கி இருந்தது. தற்போது கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸ் கொடுத்து வருகிறது.
இதையும் படியுங்கள்... விஜய் டிவி வில்லியை ஹீரோயினாக களமிறக்கும் சன் டிவி!