- Home
- Gallery
- பாரதி கண்ணம்மா சீரியல் நடிகைக்கு கமுக்கமாக நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்... மாப்ளையும் டிவி பிரபலம் தானா?
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகைக்கு கமுக்கமாக நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்... மாப்ளையும் டிவி பிரபலம் தானா?
பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலியாக நடித்து பிரபலமான நடிகை கண்மணி மனோகரனின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

kanmani manoharan, aswath
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சக்கைப்போடு போட்ட சீரியல்களில் பாரதி கண்ணம்மா சீரியலும் ஒன்று. இதில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி தற்போது சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார். அண்மையில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான கருடன் திரைப்படத்தில் உன்னி முகுந்தனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ரோஷினி.
kanmani manoharan engagement
அதேபோல் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து பேமஸான மற்றொரு நடிகை என்றால் அது கண்மணி மனோகரன் தான். இவர் அந்த சீரியலில் அஞ்சலி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். குறிப்பாக கண்ணம்மாவுக்கு வில்லி கதாபாத்திரத்தில் அஞ்சலி நடித்திருந்தார். இவரது ரோலும் அந்த சீரியலில் பெரியளவில் பேசப்பட்டது.
இதையும் படியுங்கள்... ஒட்டுமொத்த கோலிவுட்டும் இங்கதான் இருக்கு... கிராண்டாக நடந்த வரலட்சுமி சரத்குமாரின் வெட்டிங் ரிசப்ஷன் கிளிக்ஸ்
kanmani manoharan, aswath engagement
பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கு வந்த பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு தாவிய கண்மணி, அதில் ஒளிபரப்பான அமுதாவும் அன்னலட்சுமியும் என்கிற சீரியலில் நடித்தார். அந்த சீரியலில் அமுதா, பவானி என இரட்டை வேடங்களில் நடித்து அசத்தினார் நடிகை கண்மணி மனோகரன்.
kanmani manoharan engagement photos
இந்த நிலையில், சீரியல் நடிகை கண்மணிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அவர் அஷ்வத் என்பவரை காதலித்து வந்த நிலையில், அந்த ஜோடிக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. அஷ்வத்தும் டிவி பிரபலம் தான். அவர் சன் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.
Serial Actress kanmani manoharan
கண்மணி மனோகரன் - அஷ்வத் ஜோடியின் திருமண நிச்சயதார்த்தம் உறவினர்கள் முன்னிலையில் சிம்பிளாக நடந்து முடிந்துள்ளது. அவர்களது திருமண வரவேற்பில் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... எடையைக் குறைத்து தாறுமாறான லுக்கில் ஷாலின் ஜோயா! சூட்டைக் கிளப்பும் வைரல் போட்டோஸ்!