ஆயிஷா அவரை விட்டு பிரிந்ததே நல்லது தான்..! முன்னாள் கணவர் பேட்டிக்கு சீரியல் நடிகர் விஷ்ணு கொடுத்த பதிலடி..!
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வரும், ஆயிஷா குறித்து அவரது முன்னாள் கணவர் சில பகீர் தகவல்களை வெளியிட்ட நிலையில், இதுகுறித்து சீரியல் நடிகர் விஷ்ணு தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இதில் போட்டியாளராக கலந்து கொண்டு விளையாடி வரும், ஆயிஷா குறித்து.. அவரது முன்னாள் கணவர் என்று கூறிக்கொண்டு ஒருவர் கொடுத்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆயிஷா தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியதாகவும், அவருக்கு இதுவரை இரண்டு திருமணங்கள் நடந்துள்ளதாகவும், அதே போல் லோகேஷ், சத்யா சீரியல் நடிகர் விஷ்ணு போன்றவர்களையும் அவர் காதலித்து ஏமாற்றி விட்டதாக தெரிவித்திருந்தார்.
இந்த தகவல் ஆயிஷா ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆயிஷாவின் முன்னாள் கணவர் பேட்டிக்கு, பக்கா பதிலடி கொடுத்துள்ளார் விஷ்ணு.
ஆயிஷா குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ள விஷ்ணு, அவர் எப்போதுமே அப்படிதான்... ஷார்ட் டெம்பர் அதிகம் கோபப்படுவார், ஆனால் மனதில் எதையும் வைத்து கொள்ளமாட்டார். அவரை அனைவருமே டார்கெட் செய்வதுபோல் தோன்றியதால் தான் என்னவோ... கமல் சார் மும்பு அப்படி பேசிவிட்டார். கண்டிப்பாக தன்னுடைய தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பார் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.
அதே போல்... ஆயிஷாவின் முன்னாள் கணவர் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக... ஒருவர் வெளியில் இல்லாத போது அவரை பற்றி பேசுவது மிகவும் தவறான செயல், அது போல் பேசுபவர்களிடம் இருந்து ஆயிஷா பிரிந்து வந்ததே நல்லது தான் என கூறியுள்ளார்.
ஆயிஷா விஷ்ணுவை காதலிக்கிறார் என கூறப்பட்ட நிலையில், தற்போது லோகேஷ் என்பவரை காதலித்து வருவதாக அவரே தனலக்ஷ்மியிடம் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் கதை சொல்லும் டாஸ்கில் கூட அவர் தன்னை பற்றிய எந்த தகவலையும் வெளியிட மறுத்துவிட்டார்.
Hansika Marriage: தோழியின் கணவருக்கு இரண்டாவது மனைவியாகும் ஹன்சிகா..! வெளியான ஷாக்கிங் தகவல்!
ஒவ்வொரு சீசனிலும், பிக்பாஸ் போட்டியாளர்கள் கடந்து வந்த பாதை குறித்து... ரசிகர்களுக்கு தெரிவிக்கும் விதத்தில் டாஸ்க் ஒன்றை வைக்கும் நிலையில், இந்த முறை அந்த டாஸ்க் வைக்கப்பட வில்லை. எனவே இனி வரும் வாரங்களிலாவது போட்டியாளர்கள் கதையை ரசிகர்கள் கேட்கும் வாய்ப்பு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.