ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்து... பட்டு புடவை அழகில் ரசிகர்களை பரவசப்படுத்தும் வாணி போஜன்! லேட்டஸ்ட் போட்டோஸ்!
வெள்ளித்திரையில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் வாணி போஜன், தற்போது பட்டு புடவை அழகில் ரசிகர்களை பரவசப்படுத்திய லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு... லைக்குகளை குவித்து வருகிறது.
சிலர் திரைப்பட நடிகர் நடிகையாக மாற வேண்டும் என்ற கனவுடன், பல்வேறு முயற்சிகள்... தடைகளை கடந்து சினிமா வாய்ப்புகளை பெற்று சாதிப்பார்கள். இன்னும் சிலர் எதிர்பாராத விதமாக திரையுலகில் நுழைவதும் உண்டு.
இதில் இரண்டாவது ரகத்தை சேர்ந்தவர் தான் வாணி போஜன். ஏர் ஹோஸ்டர்ஸ்சான வாணி போஜனுக்கு, எதிர்பாராமல் திடீர் என கிடைத்தது தான் சீரியல் வாய்ப்பு. வந்த வாய்ப்பை, கெட்டியாக பிடித்து கொண்ட வாணி, சின்னத்திரை மூலம் தன்னுடைய அழகால் எண்ணற்ற ரசிகர்களை கவர்ந்தார்.
பின்னர் சீரியலில் இருந்து முழுமையாக விலகி, வெள்ளித்திரை வாய்ப்புகளை தேட துவங்கினார். இப்படி ஆரம்பத்தில் இவர் நடிப்பில் வெளியான சில படங்கள், பெரிய அளவிற்கு பேசப்படவில்லை என்றாலும், அஷோக் செல்வன் நடித்த 'ஓ மை கடவுளே' திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. கதாநாயகியான, ரித்திகா சிங்கை விட, பலர் வாணி போஜன் நடிப்பை தான் வெகுவாக பாராட்டி இருந்தனர்.
இந்த படத்தை தொடர்ந்து, லாக்கப், ராமே ஆண்டாளுவும் ராவனே ஆண்டாளுவும்', 'மஹான்' போன்ற படங்களில் நடித்தார். தற்போது இவரின் கைவசம் சுமார் 10க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன.
கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன் என அடம்பிடிக்காமல், சில அழுத்தமான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார் வாணி போஜன், அவ்வப்போது, தன்னுடைய கலர் ஃபுல் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை பரவசப்படுத்துகிறார். அந்த வகையில் ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்து, பட்டு புடவையில், அழகு பதுமை போல்... மிளிரும் இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படங்கள் வெளியான சில நிமிடங்களிலேயே... ரசிகர்கள் பலர் வாணி போஜனின் அழகை வர்ணித்து கமெண்ட் போட்டு வருவதுடன், லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
Hansika Marriage: தோழியின் கணவருக்கு இரண்டாவது மனைவியாகும் ஹன்சிகா..! வெளியான ஷாக்கிங் தகவல்!
மேலும் இந்த புகைப்படங்கள், வாணி போஜன் நடிப்பில் உருவாகியுள்ள திகில் படமான 'மிரள் ' படத்தின் ஆடியோ இசைவெளியீட்டு விழாவில் அவர் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.