திடீர் என கெட்டப்பை மாற்றி ஹீரோ லுக்கில்... தம்பி தனுஷுக்கே டஃப் கொடுக்கும் செல்வராகவன்!
திரைப்படங்கள் இயக்குவதை தொடர்ந்து, தற்போது திரைப்படங்கள் நடிப்பதிலும் பிசியாகி வரும் இயக்குனர் செல்வராகவும், ஹீரோ லுக்கிற்கு மாறி வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில், தன்னுடைய முதல் படத்தை இயக்கி... சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்து, முன்னணி நடிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் செல்வராகவன்.
இவரை எப்போதுமே கொஞ்சம் நீண்ட முடிகளுடனும், தாடி வைத்த முகத்துடனும் தான் இருப்பார் என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக தற்போது புதிய லுக்கிற்கு மாறியுள்ளார்.
மேலும் செய்திகள்: விஜய் சேதுபதியை அடிக்க வேண்டாமுன்னு சொல்லுக.. அப்பாவிடம் கதறி அழுத 'சூப்பர் சிங்கர்' பிரபலம்!
தலைமுடியை மிகவும் ஸ்டைலிஷாக கட் செய்து, கிளீன் ஷேவ் மற்றும் மீசையை அகற்றி விட்டு பார்ப்பதற்கு யங் ஹீரோவை போல் மாறி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இளமை தோற்றத்தில், முன்னணி ஹீரோவாக இருக்கும் அவரது சகோதரர் தனுஷுக்கு டஃப் கொடுப்பதாக இவரது ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: மஞ்சக்காட்டு மைனாவாக மாறிய சாய்பல்லவி! மேக்கப் இல்லாமல் சிவந்த முகத்தோடு சிரிப்பால் கவரும் பேரழகு போட்டோஸ்!
தனுஷை வைத்து, செல்வராகவன் நீண்ட இடைவெளிக்கு பின்னர் 'நானே வருவேன்' படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள நிலையில், அந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படம் இயக்குவதை தொடர்ந்து, நடிப்பிலும் முழு கவனம் செலுத்தி வரும் செல்வராகவன்... தற்போது இயக்குனர் மோகன் ஜி இயக்கி வரும் ‘பகாசூரன்’ படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.