விஜயகாந்த் மகனுக்காக மெகா பிளான்! 13 வருடத்திற்கு பின் படம் இயக்கும் பிரபலம்... வில்லனாகும் பாலிவுட் நடிகர்!
விஜயகாந்த் மகன் ஷண்முகபாண்டியனின் அடுத்த படத்தை இயக்க உள்ள, பிரபலம் குறித்தும் இந்த படத்தின் வில்லன் குறித்த தகவலும் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் இயக்குனராக இருந்து, பின்னர் நடிகராக மாறிய பலர் இருந்தாலும்... சிலர் இவை இரண்டிலுமே கில்லியாக இருந்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்து விடுகிறார்கள்.
அந்த வகையில், ’சுப்ரமணியபுரம்’ என்ற திரைப்படம் மூலம் இயக்குனராக மட்டும் இன்றி, நடிகராகவும் அறியப்பட்டவர் சசிகுமார். இவரின் முதல் படமே மிகவும் எதார்த்தமான கதைக்களம் என்பதாலும், வெற்றிப்பட இயக்குனர் என்கிற அந்தஸ்தை பெற்று தந்தாலும், ரசிகர்கள் மத்தியில் கவனிக்கப்பட கூடிய பிரபலமாக மாறினார்.
இப்படத்தை தொடர்ந்து கடந்த 2010 ஆம் ஆண்டு ’ஈசன்’ என்ற திரைப்படத்தை இயக்கிய நிலையில்... அடுத்தடுத்து படங்கள் நடிப்பதில் பிஸியானாதான் முழு நேர நடிகராகவே மாறினார். இந்நிலையில், சுமார் 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார் சசிகுமார்.
இந்த படத்தின் ஸ்கிரிப்டிங் வேலைகள் துரிதமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் விரைவில் படப்பிடிப்பும் ஆரம்பமாகும் என எதிர்பார்க்க படுகிறது. இந்த படத்தில், நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மகன் ஷண்முக பாண்டியன் ஹீரோவாக நடிக்க உள்ளார். அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட, படமாக இப்படம் உருவாக உள்ளதாகவும், இதில் பாலிவுட் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யாப் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
14 வயத்தில் மகள்... திருமணம் ஆகி 17 வருடத்திற்கு பின் இரண்டாவது குழந்தைக்கு அப்பாவான நடிகர் 'பக்ரு'!
ஷண்முக பாண்டியனுக்காக இந்த படத்தை இயக்க உள்ளார் சசிகுமார். மேலும் இப்படத்தின் ஹீரோயின் ஆகியோரின் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், விரைவில் இப்படம் குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.