- Home
- Cinema
- ரிலீஸ் ஆகி ஒரு மாசம் கூட ஆகல அதற்கு ஓடிடிக்கு சென்ற டூரிஸ்ட் பேமிலி - எப்போ ஸ்ட்ரீம் ஆகிறது?
ரிலீஸ் ஆகி ஒரு மாசம் கூட ஆகல அதற்கு ஓடிடிக்கு சென்ற டூரிஸ்ட் பேமிலி - எப்போ ஸ்ட்ரீம் ஆகிறது?
அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், கமலேஷ் நடித்துள்ள டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் விரைவில் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது.

Tourist Family OTT Release
2025-ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு மாஸ்டர் பீஸ் படம் தான் டூரிஸ்ட் பேமிலி. இப்படத்தை அபிஷன் ஜீவிந்த் என்கிற 25 வயது இளைஞர் இயக்கி உள்ளார். அவர் இயக்கிய முதல் படம் இதுவாகும். இப்படத்தில் சசிகுமார், சிம்ரன், எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், கமலேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்து உள்ளார். இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் யுவராஜ் தயாரித்து உள்ளார்.
ரெட்ரோவுக்கு போட்டியாக வந்த டூரிஸ்ட் பேமிலி
டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் மே 1ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இப்படம் நடிகர் சூர்யாவின் ரெட்ரோ படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆனது. டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்திற்கு ஆரம்பத்தில் கம்மியான திரையரங்குகளே ஒதுக்கப்பட்டாலும், போகப் போக இப்படம் பிக் அப் ஆனதால் இதற்கான திரையரங்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இப்படம் தற்போது 3 வாரங்களைக் கடந்தும் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.
டூரிஸ்ட் பேமிலி வசூல்
டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் வெறும் 16 கோடி பட்ஜெட்டில் தான் உருவாக்கப்பட்டது. ஆனால் இப்படம் போட்ட பட்ஜெட்டை விட பல மடங்கு லாபம் பார்த்துள்ளது. இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. அதேபோல் உலகளவில் டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் கிட்டத்தட்ட ரூ.75 கோடி வசூலித்து உள்ளது. நடிகர் சசிகுமாரின் கெரியரில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையையும் டூரிஸ்ட் பேமிலி படைத்துள்ளது. இப்படத்தை ரஜினிகாந்த், ராஜமெளலி என பல்வேறு ஜாம்பவான்களும் பாராட்டி உள்ளனர்.
டூரிஸ்ட் பேமிலி ஓடிடி ரிலீஸ்
திரையரங்குகளில் சக்கைப் போடு போட்டு வரும் டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் அதற்கு ஓடிடிக்கு சென்றுள்ளதாம். இப்படத்தின் ஓடிடி உரிமையை ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி வருகிற மே 31ந் தேதி டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இப்படம் 100 கோடி வசூலை எட்டுவது கேள்விக் குறி ஆகி உள்ளது.