- Home
- Cinema
- OTT Releases : சர்தார் 2 முதல் லவ் வரை... இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் லிஸ்ட் இதோ
OTT Releases : சர்தார் 2 முதல் லவ் வரை... இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் லிஸ்ட் இதோ
This Week OTT Releases : கார்த்தி நடித்த சர்தார் 2 முதல் அர்ஜுன் தாஸின் லவ் வரை இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் லிஸ்டை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

This Week OTT Releases
அக்டோபர் 1ஆம் தேதி கார்த்தி நடிப்பில் வெளியான ‘சர்தார் 2’ திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகிறது. திரையரங்குகளில் வெளியானதைத் தொடர்ந்து, தற்போது ஓடிடி ரசிகர்களை இப்படம் சந்திக்கிறது. அதே நாளில் ‘ரோமாஞ்சகம்’ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. திகில் மற்றும் நகைச்சுவை கலந்த இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் பட்டியலில் முக்கிய இடம் பிடித்துள்ளது. ‘பந்தடிக்காம்’ திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
‘ஓ மை டாக்’ திரைப்படமும் அக்டோபர் 1ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. ‘துப்பாஹியா’ தொடரின் இரண்டாவது சீசன் அக்டோபர் 1ந் தேதி அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ‘ஈஸ்ட் ஆஃப் ஈடன்’ தொடர் அக்டோபர் 1-ல் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது. ‘கிரேஸி ரிச், இன்க்ரெடிப்ளி ப்ரோக்’ திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. ‘பாப்பா ஸோலா: தி மூவி’ திரைப்படம் அக்டோபர் 1 முதல் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ‘சோல்மேட்’ திரைப்படம் அக்டோபர் 1ம் தேதி ஹுலு ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது.
OTT : மகளை பழிவாங்கும் தந்தையின் கதை... வெற்றிமாறன் இயக்கிய இந்த வெப் சீரிஸ் பற்றி தெரியுமா?
லவ் வெப் சீரிஸ்
அக்டோபர் 2ஆம் தேதி ‘லவ்’ என்கிற வெப் தொடர் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதில் ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் அர்ஜுன் தாஸ் இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர். இந்த வெப் சீரிஸை செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ளார். இதனை பாலாஜி மோகன் இயக்கி இருக்கிறார்.
இதுதவிர ‘மதர் பிராமிஸ்’, ‘பூஜா மேரி ஜான்’, ‘மடகாஸ்கர்: எ லிட்டில் வைல்ட்’ ஆகிய திரைப்படங்கள் அக்டோபர் 2ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ‘டூயிங் லைஃப்’ திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ‘ஈவில் டெட் பர்ன்’ திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி முதல் எச்பிஓ மேக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது. ‘ஷூமாக்கர் 94 – தி பர்த் ஆஃப் எ லெஜண்ட்’ ஆவணப்படம் அக்டோபர் 2ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ‘இன்ஃபர்மரி’ திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி ஷடர் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
ஓடிடிக்கு வரும் பெத்லஹேம் குடும்ப யூனிட்
அதே நாளில் ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. குடும்ப உறவுகளை மையமாகக் கொண்ட இந்த திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
‘தி லாஸ்ட் ஃபர்ஸ்ட்: விண்டர் கே2’ திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி ஆப்பிள் டிவி ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ‘லாக்பாக்ஸ்’ திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி எம்ஜிஎம் பிளஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது. ‘டீனேஜ் செக்*ஸ் அண்ட் டெத் அட் கேம்ப் மியாஸ்மா’ திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி முபி ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது. ‘டைலர் பெர்ரியின் டூயிங் லைஃப்’ திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. ‘யூனியன் கவுன்ட்டி’ திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி பிரைம் வீடியோ ரெண்ட் தளத்தில் வெளியாகிறது.
இந்த வார ஓடிடி வெளியீடுகள்
அக்டோபர் 3ஆம் தேதி ‘வார்’ திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அதிரடி மற்றும் சண்டைக் காட்சிகளுடன் உருவாகியுள்ள இப்படத்தின் ஓடிடி வெளியீடு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் அக்டோபர் 4ஆம் தேதி ‘ப்ளூ பாக்ஸ்’ தொடரின் இரண்டாவது சீசன் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இரண்டாவது சீசனையும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
OTT : போலீஸ்காரரே திருடனா மாறினா என்னாகும்? ஓடிடியில் இப்படி ஒரு அடிபொலி த்ரில்லர் படமா?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

