MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இரண்டே வாரத்தில் முடிவுக்கு வந்த தி லெஜண்ட் பட வசூல் வேட்டை! அறிமுக படத்திலேயே அண்ணாச்சி படைத்த மாபெரும் சாதனை

இரண்டே வாரத்தில் முடிவுக்கு வந்த தி லெஜண்ட் பட வசூல் வேட்டை! அறிமுக படத்திலேயே அண்ணாச்சி படைத்த மாபெரும் சாதனை

The Legend Boxoffice : கார்த்தியின் விருமன் படம் இன்று ரிலீசானதால் பெரும்பாலான தியேட்டர்களில் இருந்து சரவணன் அருள் நடித்துள்ள தி லெஜண்ட் படம் தூக்கப்பட்டு உள்ளது. 

2 Min read
Author : Ganesh A
Published : Aug 12 2022, 02:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தொழிலதிபரான லெஜண்ட் சரவணன் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் முதலில் தனது கடை விளம்பரங்களில் தமன்னா, ஹன்சிகா போன்ற முன்னணி நடிகைகளுடன் சேர்ந்து நடித்து பாப்புலர் ஆனார். விளம்பரங்களுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து அவர் சினிமாவிலும் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்தார். அவர் ஹீரோவாக நடித்த முதல் படம் தி லெஜண்ட்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இணைந்து இயக்கிய இப்படத்தில் சயிண்டிஸ்டாக நடித்திருந்தார் சரவணன். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்துலாவும், வில்லனாக சுமனும் நடித்திருந்தார். இதுதவிர பிரபு, விஜயகுமார், யோகிபாபு, விவேக், ரோபோ சங்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது.

35

பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் கடந்த மாதம் 28-ந் தேதி உலகமெங்கும் 2500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி அஜித், விஜய், ரஜினி படங்களுக்கு இணையாக இப்படத்தை புரமோட் செய்த லெஜண்ட் சரவணன், தனது படத்துக்கு அதிகாலை 4 மணி காட்சியும் ஏற்பாடு செய்து அதகளப்படுத்தினார்.

இதையும் படியுங்கள்... 'கன்னத்தில் முத்தமிட்டால்' சீரியலில் இருந்து விலகியது ஏன்? பகீர் காரணங்களால்... பரபரப்பை ஏற்படுத்திய நடிகை!

45

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான தி லெஜண்ட் திரைப்படம் வசூலில் பல்வேறு சாதனைகளை படைத்தது. தற்போது கார்த்தியின் விருமன் படம் இன்று ரிலீசானதால் பெரும்பாலான தியேட்டர்களில் இருந்து லெஜண்ட் படம் தூக்கப்பட்டு உள்ளது. இதனால் அப்படத்தின் வசூல் வேட்டையும் முடிவுக்கு வந்துள்ளது.

55

இப்படத்தின் இறுதி வசூல் நிலவரமும் வெளியாகி உள்ளது. அதன்படி தி லெஜண்ட் திரைப்படம் மொத்தமாக ரூ.12.5 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அறிமுக நடிகர் ஒருவரின் படம் இந்த அளவுக்கு வசூலித்து இருப்பது கோலிவுட் வட்டாரத்தை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. இதன்மூலம் அறிமுக படத்திலேயே அதிக வசூல் ஈட்டிய பெருமையை சரவணன் அருள் பெற்றுள்ளார். விரைவில் அவர் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... நாளை சர்ப்ரைஸாக வெளியாகிறது அஜித்தின் ‘ஏ.கே.61’ பர்ஸ்ட் லுக்..! அதுவும் இப்படி ஒரு தலைப்புடனா? - லீக்கான தகவல்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Karuppu : சூர்யாவின் கருப்பு படத்தை கட்டாயம் பார்க்கத் தூண்டும் டாப் 5 காரணங்கள் என்னென்ன?
Recommended image2
Now Playing
Sunny Leone Net Worth | அடேங்கப்பா கிளாமர் குயின் சன்னி லியோன் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
Recommended image3
Now Playing
CM Vijay : நடிகராக 275 கோடி சம்பளம் வாங்கிய விஜய்; முதல்வராக வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved