- Home
- Cinema
- பெரிய பழுவேட்டரையருக்கு ரஜினியிடம் இருந்த வந்த திடீர் அழைப்பு..! மகள் வரலக்ஷ்மியுடன் சென்று சந்தித்த சரத்குமார
பெரிய பழுவேட்டரையருக்கு ரஜினியிடம் இருந்த வந்த திடீர் அழைப்பு..! மகள் வரலக்ஷ்மியுடன் சென்று சந்தித்த சரத்குமார
பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்த சரத்குமாரை திடீர் என தன்னுடைய வீட்டிற்கு அழைத்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த் இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

இயக்குனர் மணிரத்னம் இயக்கிய, பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியான நிலையில், இந்த படத்தில்.. பழுவேட்டரையாராக நடித்த நடிகர் சரத்குமாரை திடீரென வீட்டிற்கு அழைத்து தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.
பலர் இயக்க முயற்சித்த, பொன்னியின் செல்வனை, பல தடைகளை கடந்து இயக்கி முடித்தார் இயக்குனர் மணிரத்னம். இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைத்து, லைகா புரொடக்ஷனும் தயாரித்திருந்தது.
மேலும் செய்திகள்: நயனும் - நானும் அம்மா & அப்பா ஆகிட்டோம்..! இரட்டை குழந்தைகள் புகைப்படத்துடன் குட் நியூஸ் சொன்ன விக்னேஷ் சிவன்!
5 பாகங்கள், 2000யிரத்திக்கும் மேற்பட்ட பக்கங்களை கொண்ட இந்த முழு நாவலையும், சுருக்கி மிகவும் திறமையாக படமாக்கி இருந்தார் மணிரத்னம்.
இந்த படத்தில் 64 விழுப்புண்களை பெற்ற மாவீரர் பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சரத்குமார். இந்த வேடத்தில் நடிகர் ரஜினிகாந்த் கூட நடிக்க விருப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் இந்த வேடத்தில் நடித்தது மிகவும் பெருமையாக உள்ளது என ஏற்கனவே, நடிகர் சரத்குமார் தெரிவித்திருந்த நிலையில், தற்போது நடிகர் ரஜினிகாந்த் சரத்குமாரை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து... பெருமை படுத்தியுள்ளார்.
மேலும் செய்திகள்: நடிகர் சின்னி ஜெயந்த் மகன் திருப்பூர் மாவட்ட சார் ஆட்சியராக நியமனம்..! குவியும் வாழ்த்து..!
நடிகர் சரத்குமார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்திக்க மகள் வரலக்ஷ்மியுடன் சென்ற புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் நடிகை வரலக்ஷ்மி தன்னுடைய தந்தையை 'பொன்னியின் செல்வன்' படத்தில் பார்க்கும் பொது ஒரு ராஜாவை போலவே தான் உணர்ந்ததாகவும் கூறியுயள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.