MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மீண்டும் ‘தல தளபதி’யாக மாறும் சந்தானம்... ‘பாஸ் என்கிற பாஸ்கரன் 2’ படத்தின் டக்கரான அப்டேட் இதோ

மீண்டும் ‘தல தளபதி’யாக மாறும் சந்தானம்... ‘பாஸ் என்கிற பாஸ்கரன் 2’ படத்தின் டக்கரான அப்டேட் இதோ

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகத்தின் மூலம் நடிகர் சந்தானம் மீண்டும் காமெடியனாக எண்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

1 Min read
Author : Ganesh A
Published : Jul 26 2023, 03:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்த திரைப்படம் பாஸ் என்கிற பாஸ்கரன். கடந்த 2010-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். சிவா மனசுல சக்தி என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்துக்கு பின்னர் ராஜேஷ் இயக்கிய படம் என்பதால் இதற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அந்த எதிர்பார்ப்பை டபுள் மடங்கு பூர்த்தி செய்த படமாக பாஸ் என்கிற பாஸ்கரன் அமைந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததற்கு காரணம் அதில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் தான். அதிலும் குறிப்பாக ஆர்யா, சந்தானம் இடையேயான கெமிஸ்ட்ரியும் வேறலெவலில் இருந்ததால், அந்த காமெடி காட்சிகள் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றன. அதில் சந்தானம் தல தளபதி என்கிற பெயரில் சலூன் நடத்தி வருபவராக நல்லத்தம்பி என்கிற கேரக்டரில் நடித்திருந்தார். இப்படம் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

இதையும் படியுங்கள்... அந்த இடத்தை மட்டும் ஓப்பனாக காட்டி... இளம் நெஞ்சங்களை பக் பக் ஆக்கிய பிரியா வாரியர் - வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்

34

இந்நிலையில், தற்போது 13 ஆண்டுகளுக்கு பின்னர் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதிலும் ஆர்யா தான் நாயகனாக நடிக்க உள்ளார். ராஜேஷ் இயக்க உள்ள இப்படத்தின் மூலம் நடிகர் சந்தானம் மீண்டும் காமெடியனாக எண்ட்ரி கொடுக்க உள்ளாராம்.

44

தற்போது வெளியாகி உள்ள லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், இப்படத்தின் ஷூட்டிங்கை வருகிற செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளார்களாம். முதல் பாகத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை நயன்தாராவையே இதிலும் ஹீரோயினாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தை தயாரிப்பது யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... சீரியல் வரலாற்றிலேயே முதல் முறையாக... எதிர்நீச்சல் தொடரில் ஹிஜாப்புடன் நடிக்கும் முஸ்லிம் நடிகை!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஆர்யா
சந்தானம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
CM Vijay ராஜினாமா செய்த தொகுதியில் போட்டியிடும் ராகவா லாரன்ஸ்? பரபரக்கும் திருச்சி கிழக்கு! ஜூன் 11 முக்கிய அறிவுப்பு!
Recommended image2
New Tamil Movies : அடுத்த 2 மாதங்களில் ரிலீசாகும் படங்கள்! அடுத்தடுத்து வரும் மிரட்டலான அறிவிப்புகள்!
Recommended image3
Salim Kumar: மலையாள நடிகர் ச‌லீம் குமார் திடீர் மரணம்! தனுஷ், சரத்குமார் படங்களில் கலக்கியவரின் உயிரிழப்புக்கு காரணம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved