கேம் சேஞ்சர் என்னுடைய Lifetime Achievement – சமுத்திரக்கனி!
Samuthirakani Said That Game Changer is my Lifetime Achievement : கேம் சேஞ்சர் என்னுடைய லைஃப்டைம் அசீவ்மெண்ட் என்று நடிகர் சமுத்திரக்கனி கூறியிருக்கிறார்.
Samuthirakani talk About Game Changer Movie
Samuthirakani Said That Game Changer is my Lifetime Achievement : இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். இப்போது ஷங்கர் இயக்கத்தில் வெளியாகியுள்ள கேம் சேஞ்சர் படத்தில் நடித்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ் ஜே சூர்யா, ஜெயராம், சமுத்திரக்கனி ஆகியோர் பலர் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த படம் தான் கேம் சேஞ்சர். முழுக்க முழுக்க அரசியல் கதையை மையப்படுத்திய இந்தப் படம் உலகம் முழுவதும் வெளியாகி ரூ.186 கோடி வரையில் வசூல் குவித்தது. இந்திய அளவில் ரூ.51 கோடி வரையில் வசூல் குவித்தது. இதில் ஹிந்தியில் மட்டும் ரூ.7 கோடியும், தெலுங்கு சினிமாவில் ரூ.41 கோடியும், தமிழகத்தில் மட்டும் ரூ.2.1 கோடியும் வசூல் குவித்தது.
Indian 2, Indian 3, Game Changer Box Office Collection Day 1 Report
ஐஏஎஸ் அதிகாரியான ராம் சரண், ஊழல் அமைச்சரான எஸ் ஜே சூர்யாவுக்கு எதிராக பல சம்பவங்களை செய்து கடைசியில் கைது வரை செல்கிறார். ஒரு கட்டத்தில் தனது அப்பாவை கொன்று முதல்வராக சிம்மாசனத்தில் அமரும் தருணத்தில் அவரது முதல்வர் பதவியை காலி செய்கிறார் எலெக்ஷன் அதிகாரி ராம் சரண். தனது ஐஏஎஸ் அதிகாரி பதவியை ராஜினாமா செய்த ராம் சரண், தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
S J Suryah, Ram Charan, Director Shankar
இதையடுத்து ராம் சரண் மற்றும் எஸ்ஜே சூர்யா ஆகியோருக்கு இடையில் நடக்கும் சம்பவங்கள் தான் கேம் சேஞ்சர் பட கதை. இந்தப் படத்தில் முதல் பகுதியில் சமுத்திரக்கனி, அஞ்சலி, கியாரா அத்வானி ஆகியோரது கதாபாத்திரங்கள் பெரியளவில் பேசப்படவில்லை. ஆனால், 2ஆவது கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனியின் கதாபாத்திரம் தான் டர்னிங் பாய்ண்ட்.
Game Changer Box Office Collection
சிஎம் ஆக இருந்த ஸ்ரீகாந்த்தை எஸ் ஜே சூர்யா கொலை செய்வதற்கு முன்னதாக அடுத்த சிஎம் யார் என்றும், தனது அரசியல் வாரிசு யார் என்பது பற்றியும் ஸ்ரீகாந்த் கூறிய வீடியோவை சமுத்திரக்கனி மீடியா முன்பு வெளியிடுவார். அதன் பிறகு தான் படத்தில் சுவாரஸ்யமான சம்பவங்கள் நடக்கும். இந்த நிலையில் தான் கேம் சேஞ்சர் படத்தில் நடித்தது குறித்து சமுத்திரக்கனி ஓபனாக கூறியிருக்கிறார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
Samuthirakani, Game Changer
சினிமாவின் ஆரம்ப காலகட்டங்களில் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசையோடு அலைந்திருக்கிறேன். ஆனால் இன்று ஷங்கர் இயக்கத்தில் அடுத்தடுத்த படங்களில் நடித்திருக்கிறார். இந்தியன் 2, கேம் சேஞ்சர் ஆகிய படங்களில் நடித்திருக்கிறேன். இந்த 2 படங்களிலுமே எனக்காகவே சில காட்சிகள் எழுதப்பட்டது என்று ஷங்கர் என்னிடம் கூறினார். அதை கேட்கும் போது எனக்கு பெரியளவில் சந்தோஷம். இதைவிட வேறு என்ன எனக்கு வேண்டும். இது தான் என்னுடைய லைஃப்டைம் அசீவ்மெண்ட் என்று சமுத்திரக்கனி கூறியிருக்கிறார்.