ஜோதிகா கர்ப்பமாக இருந்தபோது சூர்யா இப்படியெல்லாம் செய்தாரா? நடிகை பகிர்ந்த சீக்ரெட்!
Sameera Reddy About Suriya: நடிகை ஜோதிகா கர்ப்பமாக இருந்த போது, சூர்யா செய்த கியூட்டான விஷயங்களை பிரபல நடிகை சமீரா ரெட்டி பகிர்ந்துள்ளார். சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ள சமீரா என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்க்கலாம்.

'ஆசை' படத்தை நிராகரித்த சூர்யா:
பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகன் என்கிற அடையாளத்தோடு, தமிழ் சினிமாவில் ஒரு வாரிசு நடிகராக அறிமுகமானவர் தான் சூர்யா. சினிமா சம்பந்தமான படிப்பை லயோலா கல்லூரியில் படித்து முடித்த கையேடு, தன்னுடைய அம்மா வாங்கிய 10,000 கடனை அப்பாவுக்கு தெரியாமல் எப்படியாவது அடைக்க வேண்டும் என எண்ணி கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் சூர்யா பணியாற்றினார். அந்த சமயத்தில் தான் இயக்குனர் வசந்த் 'ஆசை' படத்தில், சூர்யாவை நடிக்க வைக்க விரும்பிய நிலையில் அந்த வாய்ப்பை சூர்யா ஏற்றுக்கொள்ள மறுத்ததால்... அந்த வாய்ப்பு அஜித்துக்கு சென்றது. ஒரு படம் கூட ஹிட் கொடுக்க முடியவில்லையே என்கிற அதிருப்தியில் இருந்த அஜித்துக்கு 'ஆசை' மிகப்பெரிய திருப்பு முனையாகவும் அமைந்தது.
அஜித் விலகியதால் கிடைத்த வாய்ப்பு:
பின்னர் சூர்யாவுக்கு திடீர் என சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்கிற ஆசை தொற்றிக்கொள்ள, அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். இயக்குனர் வசந்த்திடமே வாய்ப்பு கேட்டு போக, அவர் அஜித் மற்றும் விஜய்யை வைத்து இயக்க இருந்த 'நேருக்கு நேர் படத்தில்' அஜித் விலகியதால் அந்த வாய்ப்பு சூர்யாவுக்கு கிடைத்தது. 1997-ஆம் ஆண்டு வெளியான இந்த படம், படுதோல்வியை சந்தித்தது.
விஜயகாந்துக்காக ஓடிய சூர்யா படம்:
இதை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியான... காதலே நிம்மதி, சந்திப்போமா, போன்ற படங்கள் அடுத்தடுத்து தோல்வியடைந்த நிலையில், இதை தொடர்ந்து விஜயகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்து வெளியான 'பெரியண்ணா' திரைப்படம் விஜயகாந்துக்காகவே ஓடியது.
5 வருடத்திற்கு பின் கிடைத்த முதல் வெற்றி:
சூர்யா நடிக்க துவங்கி 5 வருடங்களுக்கு பின் இயக்குனர் பாலா இயக்கத்தில் நடித்த 'நந்தா' திரைப்படமே மூலம் தன்னுடைய முதல் வெற்றியை கொடுத்தார். இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் தனித்துவமான கதைகளில் அதிக ஆர்வம் காட்ட துவங்கிய சூர்யா, காக்கா காக்க, பிதாமகன், பேரழகன், ஆயுத எழுத்து, கஜினி, போன்ற பல படங்களில் நடித்தார். குறிப்பாக நடிகை ஜோதிகாவுடன் இணைத்து 3-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
விஜய் வந்தாலே மாநாடு தான்.. விஜய்யை முதல்வருடன் கம்பேர் பண்ணாதீங்க.. நீதிபதி அதிரடி
சூர்யா - ஜோதிகா திருமணம்:
சூர்யாவும் - ஜோதிகாவும் இணைந்து நடிக்கும் போது இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க துவங்கிய நிலையில், இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2006ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். ஜோதிகாவை திருமணம் செய்து கொண்ட பின்னர், இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் 'வாரணம் ஆயிரம்'. இந்த படத்தில் சூர்யா நடிக்கும் போது ஜோதிகா கர்ப்பமாக இருந்த நிலையில், சூர்யா அந்த சமயத்தில் செய்த கியூட்டான விஷயங்களை, இந்த படத்தின் கதாநாயகிகளில் ஒருவரான சமீரா ரெட்டி கூறியுள்ளார்.
சமீரா ரெட்டி ஷேரிங்ஸ்:
அதாவது " வாரணம் ஆயிரம் ஷூட்டிங்கிற்காக, சூர்யா உட்பட படக்குழுவினர் அனைவரும் சான் ஃபிரான்சிஸ்கோ சென்றிருந்தார்களாம். அப்போது ஜோதிகா கர்ப்பமாக இருந்துள்ளார். அந்த சமயத்தில் சூர்யா தந்தை ஆகப்போவதற்கு மிகவும் ஆர்வத்துடன் இருந்தாராம். எனவே பிறக்கப்போகும் குழந்தைக்காக விதவிதமாக ஏராளமான ட்ரெஸ்களை வாங்கி குவித்தாராம். அது பார்ப்பதற்கே அவ்வளவு க்யூட்டாக இருந்தது. அந்த மெமரிஸ்தான் என் வாழ்க்கையில் சிறந்தது" என்று சமீரா ரெட்டி இதுவரை பலருக்கும் தெரியாத இந்த சீக்ரெட்டை ஷேர் செய்துள்ளார்.
மக்கள வச்சு அரசியல் செய்யாதீங்க... மக்களுக்காக அரசியல் பண்ணுங்க..! நச்சுனு சொன்ன நடிகை