தன்னைப்பற்றி தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு தரமான பதிலடி கொடுத்த சமந்தா
நடிகை சமந்தா நட்சத்திர அந்தஸ்தை இழந்துவிட்டதாகவும், அவரின் கெரியர் முடிவடைந்துவிட்டதாகவும் விமர்சித்த தயாரிப்பாளருக்கு சமந்தா பதிலடி கொடுத்துள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, தற்போது பான் இந்தியா நடிகையாகவும் உயர்ந்துவிட்டார். இவர் நடிப்பில் தற்போது குஷி திரைப்படம் தயாராகி வருகிறது. இதுதவிர சிட்டாடெல் என்கிற இந்தி வெப் தொடரிலும் நடித்து வருகிறார் சமந்தா. ராஜ் மற்றும் டீகே இயக்க உள்ள இந்த வெப் தொடரில் நடிகர் வருண் தவானுக்கு ஜோடியாக சமந்தா நடிக்க உள்ளார். சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற சிட்டாடெல் வெப் தொடர் நிகழ்ச்சியிலும் சமந்தா கலந்துகொண்டார்.
இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடிகை சமந்தா குறித்து பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் சிட்டிபாபு என்பவர் அதிரடி கருத்துக்களை தெரிவித்து இருந்தார். நடிகை சமந்தா நட்சத்திர அந்தஸ்த்தை இழந்துவிட்டதாகவும், அவரின் சினிமா கெரியர் முடிந்துவிட்டதாகவும் கூறிய அவர், சமந்தா அழுதே அனுதாபம் தேடுவதாகவும் சாடி இருந்தார்.
இதையும் படியுங்கள்... ஏலியனுடன் தீபாவளி கொண்டாட ரெடியா.. பட்டாசாய் பட்டையகிளப்ப வருகிறது சிவகார்த்திகேயனின் அயலான் - ரிலீஸ் தேதி இதோ
யசோதா படத்தின் புரமோஷனின் போது அழுது கண்ணீர் வடித்து அப்படத்தை வெற்றியடையச் செய்ய சமந்தா முயன்றதாகவும், அதேபோல் சாகுந்தலம் பட விழாவிலும் அவர் கண்ணீர் சிந்தியதை சுட்டிக்காட்டி, இந்த செண்டிமெண்ட் எல்லாம் எல்லா நேரமும் ஒர்க் அவுட் ஆகாது என விமர்சித்த சிட்டி பாபு, சமந்தாவின் இந்த மலிவான மற்றும் பைத்தியக்காரத்தனமான செயல்கள் வேலைக்கு ஆகாது என்றும் தரக்குறைவாக விமர்சித்து இருந்தார்.
சிட்டி பாபுவின் பேட்டியை பார்த்து டென்ஷன் ஆன சமந்தா தற்போது அவருக்கு தரமான பதிலடி கொடுத்துள்ளார். அதன்படி காதுகளில் எப்படி முடி வளரும் என கூகுள் தேடி அதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பதிவிட்டுள்ளார். முதலில் இது எதற்காக என தெரியாமல் இருந்த ரசிகர்கள், தயாரிப்பாளர் சிட்டிபாபுவுக்கு காதில் அதிகளவில் முடி இருப்பதை விமர்சிக்கும் விதமாக தான் சமந்தா இவ்வாறு பதிவிட்டுள்ளார் என்பதை புரிந்துகொண்டு, தக் லைஃப் தலைவி என சமந்தாவை பாராட்டி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... யார நம்புறதுனே தெரியல... ஐபோன் திருடிய நண்பனை கண்டுபிடித்து வெளுத்துவாங்கிய ஷாலு ஷம்மு