ஏலியனுடன் தீபாவளி கொண்டாட ரெடியா.. பட்டாசாய் பட்டையகிளப்ப வருகிறது சிவகார்த்திகேயனின் அயலான் - ரிலீஸ் தேதி இதோ
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் பான் இந்தியா படமான அயலான் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்து தற்போது தமிழ் திரையுலகின் டாப் ஹீரோக்களின் பட்டியளில் இணைந்துள்ளவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்ததால் சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது. அவர் நடிப்பில் தற்போது மாவீரன் திரைப்படம் தயாராகி வருகிறது. மடோன் அஸ்வின் இப்படத்தை இயக்கி வருகிறார்.
மாவீரன் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடிக்க, வில்லனாக மிஷ்கின் நடித்துள்ளார். பரத் ஷங்கர் இசையமைத்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் படு ஜோராக நடைபெற்று வருகிறது. மாவீரன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 11-ந் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர்.
இதையும் படியுங்கள்... இடுப்பழகி ரம்யா பாண்டியனை போல் ஒரே போட்டோஷூட்டில் ஒட்டுமொத்த சோசியல் மீடியாவை ஸ்தம்பிக்க வைத்த திவ்யா துரைசாமி
இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள பேண்டஸி திரைப்படமான அயலான் படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி அயலான் திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளனர். இதற்காக ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டு உள்ளனர். அதில் ஏலியன் உடன் சிவகார்த்திகேயன் பறந்து செல்வது போல் புகைப்படமும் இடம்பெற்று உள்ளது.
அயலான் திரைப்படத்தை ரவிக்குமார் இயக்கி உள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, கருணாகரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம் சுமார் 6 ஆண்டு இடைவெளிக்கு பின் ரிலீஸ் ஆக உள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ள இப்படத்தில் 4500-க்கும் மேற்பட்ட வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் இடம்பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... யார நம்புறதுனே தெரியல... ஐபோன் திருடிய நண்பனை கண்டுபிடித்து வெளுத்துவாங்கிய ஷாலு ஷம்மு