- Home
- Cinema
- அச்சச்சோ... கீழே ஒன்னும் போடலையா? பார்த்ததும் பக்குனு ஆகிடுச்சு... ரசிகர்களை மிரள வைத்த சமந்தாவின் உடை!
அச்சச்சோ... கீழே ஒன்னும் போடலையா? பார்த்ததும் பக்குனு ஆகிடுச்சு... ரசிகர்களை மிரள வைத்த சமந்தாவின் உடை!
சிட்டாடல் வெப் தொடருக்காக, நடிகை சமந்தா செர்பியா சென்ற போது, படப்பிடிப்புக்கு பின்னர் சில இடங்களில் ஷாப்பிங் செய்தார். அப்போது எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

நடிகை சமந்தா கடந்த ஜூன் மாதம் செர்பியா நாட்டுக்கு சென்றார். அங்கு இவர் நடித்து வந்த சிட்டாடல் வெப் தொடர் ஷட்டிங், நடைபெற்றது. இதன் காரணமாக சமந்தா மட்டும் இன்றி ஒட்டுமொத்த படக்குழுவினரும் அங்கு ஒரு மாதம் வரை தங்கி படப்பிடிப்பு நடத்தினார்கள் .
சமந்தா நடிக்க வேண்டிய காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்த பின்னர், செர்பியா நாட்டில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று, அங்கு புகைப்படங்கள் எடுத்து வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.
விதவிதமான உடையில், சமந்தா அங்கு எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக நிலையில், இதில் குறிப்பிட்ட ஒரு ஆடையில் சமந்தா எடுத்து கொண்ட போட்டோ... பார்த்ததுமே ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
ஸ்கின் கலர் டைட் பேன்ட் அணிந்து சமந்தா புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். இந்த உடையில் இவரை சட்டென பார்க்கும் போது, கீழே பேன்ட் போட்டிருக்கிறாரா? என சந்தேகத்தை எழுப்ப செய்தது. மேலும் குறிப்பிட்ட இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் தாறுமாறாக பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சிட்டாடல் குழு, செர்பியா சென்றபோது அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து அவருடன் புகைப்படமும் எடுத்து கொண்டனர். வருண் தவான், சமந்தா, ராஜ் மற்றும் டிகே ஆகியோர் ஜனாதிபதியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த போட்டோஸ் படு வைரலானது.
சமந்தா நடித்து முடித்துள்ள சிட்டாடல் தொடரின் ஆங்கில பதிப்பில் பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார். அதன் இந்திய பதிப்பில் சமந்தா நடித்துள்ளார் . சிட்டாடல் தொடரை தி ஃபேமிலி மேன் புகழ் ராஜ் மற்றும் டிகே இயக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகாவில் 50 கோடி வசூல் செய்த 'ஜெயிலர்'..! தலைவரை கொண்டாடும் ரசிகர்கள்..!