கர்நாடகாவில் 50 கோடி வசூல் செய்த 'ஜெயிலர்'..! தலைவரை கொண்டாடும் ரசிகர்கள்..!
'ஜெயிலர்' திரைப்படம் கர்நாடகாவில் இதுவரை 50 கோடி வசூல் செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
'பீஸ்ட்' படத்தின் தோல்வியால் துவண்டு போன நெல்சன் திலீப் குமாருக்கு, 'ஜெயிலர்' திரைப்படம் ஸ்ட்ராங்கான கம்பேக் கொடுத்துள்ளது. ஆகஸ்ட் 10ஆம் தேதி, வெளியான இந்த திரைப்படம் தற்போது, ரூ.450 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ள நிலையில், தொடர்ந்து ரசிகர்களும், பத்திரிக்கையாளர்களும், 'ஜெயிலர்' படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இப்படம் வெளியான ஒரு வாரத்திலேயே ரூ.375 கோடிக்கு மேல் வசூல் செய்த நிலையில், நேற்று முன்தினம் 'ஜெயிலர்' படக்குழு இந்த மாபெரும் வெற்றிக்கு காரணமாக அமைந்த பத்திரிகையாளர் மற்றும் ரசிகர்களுக்கு தங்களுடைய நன்றிகளை தெரிவித்தனர்.
'எதிர்நீச்சல்' சீரியலில் இருந்து அதிரடியாக தூக்கப்பட்ட கதாபாத்திரம்! யார் தெரியுமா?
மேலும் 'ஜெயிலர்' படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, நீண்ட நாட்களாக ரஜினிகாந்திடம் ரசிகர்கள் எதிர்பார்த்த ஆக்சன் அதிரடி மற்றும் மாஸ் காட்சிகள் இப்படத்தில் இடம்பெற்றிருந்தது தான். அதேபோல் இந்த படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த விநாயகன், மோகன்லால், ஜாக்கிஷரீப், சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, என அனைவருமே தங்களால் முடிந்த அளவிற்கு அவரவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தனர்.
'ஜெயிலர்' திரைப்படம் தமிழில் மட்டும் இன்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், போன்ற தென்னிந்திய மொழிகளிலும் வெளியாகி... ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி, கர்நாடகாவில் 'ஜெயிலர்', கோலிவுட் திரைப்படங்களிலேயே இரண்டாவது அதிக வசூலை பெற்ற திரைப்படம் என்கிற சாதனையை படைத்துள்ளது.
Throw Back: முழுமையான உடலுறவு இப்படித்தான் இருக்க வேண்டும்..! நடிகை கஜோல் கூறிய அந்தரங்க சீக்ரெட்!
அதாவது இப்படம் இதுவரை 50 கோடி வசூலை பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில், இதற்கு முன்னர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 திரைப்படம் தான்... கர்நாடகாவில் அதிக வசூலை பெற்ற திரைப்படமாக முதல் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.