என்னது சிம்புவும்; சாய் பல்லவியுமா? கோலிவுட்டில் உருவாகும் புது காதல் ஜோடி!
தமிழ் சினிமாவில் தற்போது பிசியான ஹீரோவாக வலம் வரும் சிம்பு, தக் லைஃப், ராம்குமார் இயக்கும் படம், தேசிங்கு பெரியசாமி இயக்கும் படம், அஸ்வத் இயக்கத்தில் ஒரு படம் ஆகியவற்றை கைவசம் வைத்துள்ளார்.

சிம்புவுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி
தமிழ் சினிமாவில் தற்போது பிசியான நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் நடிப்பில் ஒரே நேரத்தில் நான்கு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இதில் மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்துள்ள தக் லைப் திரைப்படம் வருகிற ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் கமல்ஹாசனின் மகனாக நடித்துள்ளார் சிம்பு. அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் ஏற்கனவே செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்திருந்த சிம்பு தற்போது இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளார்.
சிம்புவின் 50வது படம்
இதுதவிர கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார் சிம்பு. அது சிம்புவின் 50வது படமாக உருவாக உள்ளது. இப்படத்தில் ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி அதை தன்னுடைய ஆத்மன் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இது வரலாற்று கதையசம் கொண்ட படமாக உருவாக உள்ளது. இதில் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார் சிம்பு.
இதையும் படியுங்கள்... நடிகை சாய் பல்லவியின் விபரீத ஆசை; ஓப்பனாக போட்டுடைத்த நாக சைதன்யா!
சிம்பு நடிக்கும் God Of Love
பின்னர் சிம்புவின் 51-வது படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே ஓ மை கடவுளே என்கிற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இதையடுத்து பிரதீப் ரங்கநாதனை வைத்து டிராகன் என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார். அப்படம் வருகிற பிப்ரவரி 21ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. அப்படம் முடிந்ததும் சிம்புவின் 51வது படத்தின் பணிகளை தொடங்க உள்ளார் அஸ்வத். இப்படத்திற்கு காட் ஆஃப் லவ் என பெயரிடப்பட்டு உள்ளது. இது பேண்டஸி கதையம்சம் கொண்ட படமாக உருவாக உள்ளது.
STR 49 பட ஹீரோயின் சாய் பல்லவி
சிம்புவின் லைன் அப்பில் உள்ள மற்றுமொரு படம் எஸ்.டி.ஆர் 49. இப்படத்தை ராம்குமார் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே ஹரிஷ் கல்யாண் நடித்த பார்க்கிங் என்கிற சூப்பர் ஹிட் படத்தை இயக்கியவர். இப்படத்தில் நடிகர் சிம்பு கல்லூரி மாணவனாக நடிக்க உள்ளார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க உள்ள நடிகை யார் என்பது குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகை சாய் பல்லவியை சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
காமெடியனாக சந்தானம்
இப்படத்தில் சிம்பு கல்லூரி மாணவனாக வேற நடிப்பதால், கண்டிப்பாக அவர்கள் இருவருக்கு இடையேயான காதல் காட்சிகள் நிச்சயம் இருக்கும் என கூறப்படுகிறது. இருவரும் நடிப்பில் பின்னி பெடலெடுப்பவர்கள் என்பதால் கோலிவுட்டில் ஒரு புது ரொமாண்டிக் ஜோடி உருவாக இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. அதுமட்டுமின்றி இப்படத்தில் சந்தானமும் காமெடியனாக நடிக்க உள்ளாராம். ஏற்கனவே சிம்பு - சந்தானம் காம்போவில் வெளிவந்த படங்கள் எல்லாம் பட்டைய கிளப்பி உள்ளதால் இப்படமும் தூளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... STR 51 படத்துக்காக கடவுளாக மாறும் சிம்பு! God Of Love படத்தின் கதை இதுதானா?