நடிகை சாய் பல்லவியின் விபரீத ஆசை; ஓப்பனாக போட்டுடைத்த நாக சைதன்யா!
நடிகை சாய் பல்லவிக்கு நடிப்பை தாண்டி திரையுலகில் இருக்கும் விபரீத ஆசை குறித்து... நாக சைதன்யா 'தண்டேல்' திரைப்படத்தின் புரமோஷனின் போது தெரிவித்துள்ளார்.

கவர்ச்சி காட்டாமல் ஜெயிக்கும் சாய் பல்லவி
தமிழ் சினிமாவில்,கவர்ச்சியை காட்டி தங்களை தக்கவைத்துக் கொள்ளும் இளம் நடிகைகளுக்கு மத்தியில், துளியும் கவர்ச்சி காட்டாமல் தன்னை முன்னணி நடிகையாக நிலைநாட்டிக் கொண்டுள்ளவர் தான் சாய் பல்லவி. இவருடைய அழகை தாண்டி சாய் பல்லவியின் அபாரநடிப்பும், அவருடைய நடன அசைவுகளும் இவரை ரசிகர்கள் மத்தியில் தனித்துவமாக பார்க்க வைக்கிறது.
பிரேமம் பட நாயகி சாய் பல்லவி:
இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'ப்ரேமம்' படம் மூலம் நடிகையாக அறிமுகமான சாய் பல்லவி, முதல் படத்திலேயே தன்னுடைய க்யூட் நடன அசைவுகள் மூலம் இளம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார். இந்த படம் திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. மேலும் இந்த திரைப்படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமான சாய்பல்லவி உட்பட மடோனா செபஸ்டின், அனுபமா பரமேஸ்வரன், என மூன்று பேருமே தற்போது திரையுலகில் நிலையான இடத்தை பிடித்துள்ளனர்.
2-ஆவது நாள் வசூலில் 65% சரிவை கண்ட 'விடாமுயற்சி'! ஷாக்கிங் ரிப்போர்ட்!
தமிழ் சினிமாவில் சாய் பல்லவி அறிமுகமான திரைப்படம்
அதே போல் தமிழில் சாய்பல்லவி இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் வெளியான தியா படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்திலேயே 5 வயது குழந்தைக்கு அம்மாவாக நடித்தார். விமர்சன ரீதியாக இந்த படம் வெற்றி பெற்ற போதிலும் வசூல் ரீதியாக வெற்றி பெற தவறியது. பின்னர் தனுஷுக்கு ஜோடியாக மாரி, சூர்யாவுக்கு ஜோடியாக என் ஜி கே போன்ற திரைப்படங்களில் நடித்தார். கதையின் நாயகியாக இவர் நடித்த 'கார்க்கி' படமும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
சாய் பல்லவிக்கு வெற்றி கொடுத்த அமரன் திரைப்படம்:
கடந்த ஆண்டு சாய் பல்லவி, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த 'அமரன்' திரைப்படம் அல்டிமேட் வெற்றி பெற்றது. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீசான இந்த திரைப்படம் ரூ.335 கோடி வசூல் செய்தது. இந்தப் படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருந்த நிலையில், கமலஹாசன் தயாரித்திருந்தார்.
தென்னிந்திய மொழிகளைத் தொடர்ந்து, தற்போது பாலிவுட் திரையுலகிலும் கால் பதித்துள்ள சாய் பல்லவி, நடிகர் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ராமாயணம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சாய் பல்லவி சீதையாக நடிக்கிறார். மேலும் நேற்றைய தினம் சாய் பல்லவி நடிப்பில் 'தண்டேல்' திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் நாக சைதன்யா ஹீரோவாக நடித்துள்ளார். மீனவர்களின் உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், தொடர்ந்து ஆந்திரா மற்றும் தெலுங்கானா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அஜித் படத்தால் என் கேரியரே போச்சு; நம்பவைத்து ஏமாத்திட்டார் சிவா - நடிகை குமுறல்!
சாய் பல்லவியின் இயக்குனர் ஆசை:
இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாகசெய்தன்யா, சாய் பல்லவியின் இயக்குனர் ஆசை குறித்து தெரிவித்துள்ளார். சாய்பல்லவி தனக்கு திரைப்படம் இயக்குவதில் ஆர்வம் இருப்பதாக கூறியுள்ளதாகவும், அவர் இயக்குனராகும் போது தனக்கு அந்த படத்தில் நடிக்க ஒரு கதாபாத்திரம் தருவதாக கூறியுள்ளார் என பேசி உள்ளார். இந்த தகவல் தற்போது வைரலாக்கி வருகிறது. ரசிகர்கள் சிலர் ஏன் உங்களுக்கு இந்த விபரீத ஆசை என கமெண்ட் போட்டு வருகிறார்கள்.