அஜித் படத்தால் என் கேரியரே போச்சு; நம்பவைத்து ஏமாத்திட்டார் சிவா - நடிகை குமுறல்!
வீரம் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்க வைக்கிறேன் என்று சொல்லி என்னை அந்தப் படத்தில் நடிக்க வைத்து, இயக்குனர் சிவா ஏமாற்றி விட்டார் என்று நடிகை மனோசித்ரா குமுறியுள்ளார்.

சிறுத்தை சிவா:
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி ஹிட்டான திரைப்படம் தான் வீரம். முழுக்க முழுக்க அண்ணன் தம்பி பாசம், காதல், மற்றும் குடும்பக் சென்டிமென்ட்டை மையமாக வைத்து வீரம் திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். இவர்களுடன் விதார்த், சந்தானம், நாசர், பிரதீப் ராவத், அவினாஷ், அப்புக்குட்டி, மனோசித்ரா, அபிநயா, ரமேஷ் கண்ணா என்று ஏராளமானோர் நடித்திருந்தார்கள். விஜயா புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்திற்க் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.
அஜித் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம்:
வீரம் படத்தின் முதல் பாதியில் அஜித் பெரியளவில் மெனக்கெட்டிருக்கமாட்டார். சர்வ சாதாரணமான ஒரு நடிப்பை தான் வெளிப்படுத்தியிருப்பார். ஆனால், 2ஆவது பாதியில் அளவுக்கு அதிகமான ஆக்ஷன் காட்சிகள் காரணமாக ரொம்பவே மெனக்கெட்டு நடித்திருப்பார். மேலும், இந்த படம் ழுழுவதும் அஜித் வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டையில் தான் நடித்திருப்பார். எனவே இந்த படம் வெளியாகும் போது பல அஜித் ரசிகர்கள் வெள்ளை வேஷ்டி சட்டையில் வந்து படம் பார்த்தது மட்டும் இன்றி, இது படம் ரிலீஸ் ஆனபோது ஒரு ட்ரெண்டாகவும் பார்க்கப்பட்டது.
உண்மையை உடைத்த மயில் வாகனம்; கார்த்தி செய்யப்போவது என்ன? கார்த்திகை தீபம் அப்டேட்!
அஜித்துக்கு ஜோடி என ஏமாற்றிய சிறுத்தை சிவா:
இந்த நிலையில் தான் இந்தப் படத்தில் நடித்த நடிகை மனோசித்ரா, தன்னை ஏமாற்றிவிட்டார்கள் என்று குமுறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இந்தப் படத்திற்காக என்னை அப்ரோச் பண்ணும் போது படத்தில் தமன்னா நடிக்கிறார். ஆனால், அவர் ஒரு சீனில் இறந்துவிடுவார். அதனால், அஜித்திற்கு நீங்கள் தான் ஜோடி என்று சொல்லி தான் என்னை நடிக்க வைத்தார்கள். கடைசியில் என்னிடம் மட்டுமின்றி எல்லோரிடமும் இதைத் தான் சொல்லி நடிக்க கூட்டிட்டு வந்திருப்பது தெரிந்தது.
கண்ணீர் விட்ட நடிகை மனோசித்ரா:
அதன் பிறகு தான் நான் இயக்குநர் சிறுத்தை சிவாவிடம் இதைப் பற்றி சொல்லி அழுதேன். அழும் போது கூட நீங்க ரொம்ப அழகாக இருக்கிறீர்கள் என்று சொல்லி என்னை சமாதானம் செய்தார். பின்னர் அஜித்திற்காக தான் அந்தப் படத்தில் நடித்தேன். அந்தப் படத்தில் என்னுடைய சினிமா வாழ்க்கை ரொம்பவே அடி வாங்கியது என்று கூறியிருக்கிறார்.
3 படத்தில் ரூ.1600 கோடி வசூல்! அசர வைக்கும் தமிழ் நடிகை யார் தெரியுமா?
பரபரப்பை ஏற்படுத்திய நடிகையின் பேச்சு:
மனோசித்ரா 'இன்னொருவன்' என்ற தமிழ் படம் மூலம் அறிமுகமானார். அவருக்கு ஜெய் நடித்த அவர் பெயர் தமிழரசி என்ற படம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இதைத் தொடர்ந்து நீர்ப்பறை என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு தான் அஜித் நடித்த வீரம் படத்தில் நடித்தார். இந்தப் படத்திற்கு பிறகு நேற்று இன்று, அந்தமான், புதிய முகம், ரூம் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமின்றி ஒரு சில தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பில்லாமல் இருக்கிறார். தன்னுடைய கேரியருகே உலை வைத்தது வீரம் படம் தான் என்றும், சிவா தன்னை ஏமாற்றி விட்டதாகவும் கூறியுள்ள தகவல் இப்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.