MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 3 படத்தில் ரூ.1600 கோடி வசூல்! அசர வைக்கும் தமிழ் நடிகை யார் தெரியுமா?

3 படத்தில் ரூ.1600 கோடி வசூல்! அசர வைக்கும் தமிழ் நடிகை யார் தெரியுமா?

மூன்றே படங்களில் நடித்திருந்தாலும் தற்போது ரூ.1600 கோடி வசூல் செய்த நடிகை அதிஷ்டக்கார நடிகை யார் என்பது உங்களுக்கு தெரியுமா? இவர் நடித்த படங்கள், மற்றும் இவரின் சிறப்புக்கள் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். 

2 Min read
Author : manimegalai a
Published : Feb 07 2025, 04:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
யார் இந்த ஸ்ரீநிதி ஷெட்டி?

யார் இந்த ஸ்ரீநிதி ஷெட்டி?

ஒரு மாடலாக தன்னுடைய கேரியரை துவங்கி, தற்போது ஹீரோயினாக மாறி உள்ளவர் தான் ஸ்ரீநிதி ஷெட்டி. கர்நாடக மாநிலம், மங்களூரை சேர்ந்த இவர் தன்னுடைய இளம் வயதிலிருந்து மாடலிங் மற்றும் ஃபேஷனில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

2012 ஆம் ஆண்டு ஸ்ரீநிதி ஷெட்டி, 'கிளீன் அண்டு கிளியர்'  ஸ்பான்சர் செய்த பிரெஷ் ஃபேஸ் போட்டியில் பங்கேற்று, டாப் போட்டியாளர்களின் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார். இதன் பின்னர் 2015ல், மணப்புரம் மிஸ் சவுத் இந்தியாவில் பங்கேற்று மிஸ் கர்நாடகா மற்றும் மிஸ் பியூட்டிஃபுல் ஸ்மைல் பட்டங்களை வென்றார். பின்னர் மணப்புரம் குயின் ஆஃப் இந்தியா நிகழ்ச்சியில் பங்கேற்றார் ஸ்ரீநிதி ஷெட்டி அதில் முதல் ரன்னரப்பாக முடிசூடினார். 

26
மாடலிங் துறையில் பிரபலமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி

மாடலிங் துறையில் பிரபலமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி

இதை தொடர்ந்து  2018 ஆம் ஆண்டு, மிஸ் திவா போட்டியில் பங்கேற்று  இறுதிப் போட்டிக்கு தேர்வானார். மிஸ் சுப்ரனேஷன் இந்தியா 2016 பட்டத்தை வென்று ஒட்டு மொத்த இந்தியாவையும் தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். இது தவிர தற்போது வரை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ், ஜப்பான், சிங்கப்பூர், தாய்லாந்து, போன்ற பல நாடுகளில் நடைபெற்ற அழகி போட்டிகளில் இந்தியாவை பிரதிநித்துவம் படுத்தும் விதத்தில், போட்டியாளராக பங்கேற்று பல்வேறு பரிசுகளை வென்றார்.

உண்மையை உடைத்த மயில் வாகனம்; கார்த்தி செய்யப்போவது என்ன? கார்த்திகை தீபம் அப்டேட்!
 

36
முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றி

முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றி

இந்த நிலையில் தான் இவரை நடிக்க வைக்கவும் பலர் முயன்று வந்தனர். அந்த வகையில் 2018 ஆம் ஆண்டு கன்னட திரை உலகில் மிகப்பெரிய வெற்றி பெற்ற கே ஜி எஃப் சப்பட்டர் 1 திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த திரைப்படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருந்தார். ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகனாக நடித்திருந்தார்.

46
தங்க வயலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட KGF பட நாயகி ஸ்ரீநிதி

தங்க வயலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட KGF பட நாயகி ஸ்ரீநிதி

இந்த திரைப்படம் ரூ.80 கோடி செலவில் எடுக்கப்பட்டு, ரூ. 250 கோடி வசூல் சாதனை செய்தது. தங்கம் எடுக்கும் தொழிலாளர்களை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து உருவான கேஜிஎப் சாப்டர் 2 திரைப்படத்திலும், ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்தார். முதல் முதல் பாகத்தில் நடிக்கும் போது ஒரு கோடி மட்டுமே சம்பளம் வாங்கிய ஸ்ரீநிதி, இரண்டாவது பாகத்தில் நடிக்க தன்னுடைய சம்பளத்தை ஐந்து மடக்காக உயர்த்தி, ரூபாய் 5 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்பட்டது.

அந்த பழக்கத்தை விட்ட பின்பு தான் தெளிவு வந்துச்சு; சிவகார்த்திகேயன் பகிர்ந்த சீக்ரெட்!

56
விக்ரம் ஜோடியாக நடித்த கோப்ரா பட நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி:

விக்ரம் ஜோடியாக நடித்த கோப்ரா பட நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி:

மேலும் இந்த திரைப்படம் ரூ.100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, ரூ.1300 கோடி வசூல் சாதனை செய்தது. இந்த படத்திற்கு பின்னர், தமிழிலும் கால் பதித்த ஸ்ரீநிதி ஷெட்டி, நடிகர் விக்ரபுக்கு ஜோடியாக 2022 ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான கோப்ரா திரைப்படத்தில் நடித்தார். ஆனால் இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான போதிலும் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது.
 

66
3 படத்தில் 1600 கோடி வசூல்:

3 படத்தில் 1600 கோடி வசூல்:

இந்த 'கோப்ரா' படம் ரூ.65 கோடி முதல் ரூ.70 கோடி வரை மட்டுமே வசூல் செய்தது. இதைத்தொடர்ந்து ஸ்ரீநிதியின் கைவசம் தெலுங்கில் உருவாகும் தெலுசு காடா, HIT: The Third Case மற்றும் கனடாவில் கிச்சா 47 போன்ற திரைப்படங்கள் உள்ளன . இதுவரை இவர் நடிப்பில் மூன்று படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆகி இருந்தாலும், மொத்தமாக அந்த படங்கள் ரூ.1600 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரகாஷ் ராஜ் பற்றி சரியாக கணித்த சோபன் பாபு; அப்படியே நடந்த ஆச்சர்யம்!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே நாளில் 2 கல்யாணம்! ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவின் 'மெகா' திருமண ஏற்பாடுகள் - முழு விவரம்
Recommended image2
மமிதா பைஜூ முதல் ஸ்ரீலீலா வரை: 2K ஹிட்ஸ்களின் மனதை கொள்ளை கொண்ட டாப் ஹீரோயின்கள்!
Recommended image3
2 வருடங்களாக ஒரு தமிழ் படம் கூட ரிலீஸ் இல்ல; மார்க்கெட்டை இழந்தாரா நயன்தாரா: இளம் ஹீரோயின்களை தேடும் தமிழ் சினிமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved