உண்மையை உடைத்த மயில் வாகனம்; கார்த்தி செய்யப்போவது என்ன? கார்த்திகை தீபம் அப்டேட்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில், நாள்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், இன்று நடக்கப் போவது என்ன? என்பது பற்றி பார்க்கலாம்.

கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில், 'கார்த்திகை தீபம்' சீரியலின் முதல் சீசன் கடந்த ஆண்டு முடிவுக்கு வந்த நிலையில், அதைத்தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகம் பரபரப்புக்கு பஞ்சமின்றி ஒளிபரப்பாகி வருகிறது.
தன்னுடைய குடும்பத்தை ஒன்று சேர்க்க, கார்த்தி டிரைவர் போல் சொந்த தாய் மாமன் வீட்டில் அடையாளத்தை மறைத்து கொண்டு வேலை செய்யும் நிலையில், இந்த உண்மை தற்போது ராஜ ராஜனுக்கு தெரிய வர அவர் உடைந்து அழும் காட்சிதான் இன்றைய தினம் ஒளிபரப்பாக உள்ளது.
வெளியே அனுப்பப்படும் கார்த்தி
வீட்டிற்கு வரும் ராஜராஜன், கார்த்தி உள்ளே இருப்பதை பார்த்து... அவனை உடனே வெளியே போக சொல்கிறார். இதை பார்த்து மயில் வாகனம், உண்மை என்ன என்பது தெரிஞ்சா இப்படி சொல்ல மாட்டீங்க என ஏதோ சொல்ல வர, கார்த்தி மயில் வாகனத்தை உண்மையை சொல்ல விடாமல் தடுத்து நிறுத்துகிறான்.
அந்த பழக்கத்தை விட்ட பின்பு தான் தெளிவு வந்துச்சு; சிவகார்த்திகேயன் பகிர்ந்த சீக்ரெட்!
சாமூண்டீஸ்வரியிடம் கேள்வி கேக்கும் மயில் வாகனம்
அடுத்ததாக சாமுண்டீஸ்வரி சாப்பிட உட்காரும் போது, மயில் வாகனம் அத்தை நீங்க இப்படி செஞ்சிருக்க கூடாது, அந்த டிரைவர் எத்தனையோ நாள் நம்ம வீட்ல இருந்து இருக்கான். ஒரு முறையாவது நம்ம வீட்டு பொண்ணு கிட்ட இப்படி எல்லாம் நடந்திருக்கானா? என கூறி... ஒரு பார்வையாவது தப்பா பார்த்து இருக்கானா என கேள்வி எழுப்புகிறான்.
உண்மையை உடைக்கும் மயில் வாகனம்:
இதன் பிறகு ராஜராஜன் தனியாக இருக்கும் நேரத்தில், அவர் அருகே வரும் மயில் வாகனம் அந்த டிரைவர் தம்பி உங்களுக்கு யாருன்னு தெரியுமா? என கேள்வி எழுப்ப அவர் எதுவும் தெரியாமல் விழிக்கிறார். அந்த டிரைவர் வேறு யாரும் இல்ல உங்க தங்கச்சி அபிராமி உடைய பையன் தான் என, ராஜராஜனிடம் மயில் மாகாணம் உண்மை உடைக்கிறார்.
34 வயதாகியும் முரட்டு சிங்கிள்; திருமணம் பற்றிய கேள்விக்கு ரெஜினாவின் எதிர்பாராத பதில் !
கலங்கி அழுத ராஜராஜன்:
ராஜசேதுபதி ஊரில் இருக்கும் கோவிலில் கும்பாபிஷேகத்தை, உங்க கையால் நடத்தி வைக்கணும் எனக் கூறி இரு குடும்பத்தையும் ஒன்னு சேர்ப்பதற்காக தான், இங்கே டிரைவராக கார்த்தி வந்திருக்கும் தகவலையும் கூறுகிறார். இந்த விஷயம் தெரிய வந்ததும், தன்னுடைய தங்கச்சி பையனா கார்த்தி? இந்த சொத்துக்கெல்லாம் சொந்தக்காரனா? அவன் என் மருமகன் என ராஜ ராஜனுக்கு பாசம் வெளிப்படுகிறது. பின்னர் கார்த்தியை வெளியே அனுப்பியதை நினைத்து வருத்தப்படுகிறார். இந்நிலையில் அடுத்து என்ன நடக்கப் போகிறது? என்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து கார்த்திகை தீபம் சீரியலை பாருங்கள்.