34 வயதாகியும் முரட்டு சிங்கிள்; திருமணம் பற்றிய கேள்விக்கு ரெஜினாவின் எதிர்பாராத பதில் !
34 வயதை எட்டியுள்ள, நடிகை ரெஜினா கஸாண்ட்ரா, திருமணம் பற்றி யார் என்னிடம் கேள்வி எழுப்பினாலும் என்னுடைய பதில் இது தான் என, யாரும் எதிர்பாராத பதிலை கூறி ஷாக் கொடுத்துள்ளார் விடாமுயற்சி நடிகை

நடிகை ரெஜினா கஸாண்ட்ரா:
தமிழ், தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரெஜினா கஸாண்ட்ரா. டோலிவுட் திரையுலகில் இவர் முன்னணி நடிகையாக இருந்தாலும், திரையுலகில் இவர் அறிமுகமானது தமிழ் படங்கள் மூலம் தான். அந்த வகையில் 'கண்ட நாள் முதல்' படத்தின் மூலம் 2005-ஆம் ஆண்டு நடிகையாக தன்னுடைய கேரியரை துவங்கினார்.
திருப்பு முனையை ஏற்படுத்திய திரைப்படம்:
பிரசன்னா மற்றும் கார்த்தி குமார் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில் லைலா கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து, அழகிய அரசுரா படத்தில் நடித்தார். இந்த படமும் இவருக்கு கை கொடுக்காத நிலையில், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் கவனம் செலுத்த துவங்கினார். ஆனால் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இவர் நடித்த, 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படம் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்த போதும்... தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.
கல்யாணம் ஆனாலும் வாழ்க்கையை ஆரம்பிக்கல; சாக்ஷி அகர்வால் பகிர்ந்த பர்சனல்!
விடாமுயற்சி திரைப்படம்:
அவ்வப்போது சில தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த, ரெஜினா தற்போது 'விடாமுயற்சி' படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில், வில்லன் கேங்கில் இவரும் ஒருவர். அதுவும் ஆக்ஷன் கிங் அர்ஜூனுக்கு மனைவியாக நடித்துளளார். இந்தப் படம் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக இந்தப் படத்தில் இன்டர்வெல் பிளாக்கில் அஜித்தின் மனைவியை கடத்த சொன்னது யார் என்பது குறித்த சீக்ரெட்டை ரெஜினா வெளியிட்டிருப்பார். இது யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்டாக அமைந்திருக்கும்.
திருமணம் குறித்த கேள்விக்கு ரெஜினா பதில்:
ரெஜினாவின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பற்றி ரெஜினா பேசியது வைரலாக நிலையில், இப்போது திருமணம் குறித்து பேசி உள்ள தகவல் வைரலாகிக் கொண்டிருக்கிறது. தற்போது 34 வயதாகும் ரெஜினா இன்னமும் முரட்டு சிங்கிளாகவே இருக்கிறார். இதற்கு விளக்கம் கொடுத்த ரெஜினா... "எப்போ கல்யாணம் பண்ண போற என்று என்னுடைய அம்மாவே கேட்க மாட்டாங்க. அப்படியிருக்கும் போது அந்த கேள்வியை யார் கேட்டாலும்," என்னுடைய அம்மாவே கேட்க மாட்டாங்க, நீங்கள் ஏன் கேட்கிறீர்கள், உங்களுக்கு என்ன என்று பளீச் என கேட்டுவிடுவேன் என கூறியுளளார்."
Netflix-ல் வெளியான டாப் 10 படங்கள் & வெப் சீரிஸ்! புஷ்பா 2 செய்த சாதனை!
எதிர்பாராத பதில்:
அதுமட்டுமின்றி யாருடனும் நான் உறவில் இருப்பது அவர்களுக்கு தான் ரொம்பவே கஷ்டம். ஆனால், ஃப்ரண்ட்ஷிப் மட்டுமே ஈஸியான இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள், எதிர்காலத்திலாவது திருமணம் செய்து கொள்வீர்களா? அல்லது லைப் லாங் முரட்டு சிங்கிளா என கமெண்ட் போட்டு வருகிறார்கள்.