- Home
- Cinema
- ‘தி கேரளா ஸ்டோரி’ உண்மை கதையா? ஆதாரத்தை காட்டுறவனுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் - ரூ.1 கோடி பரிசு அறிவிப்பு
‘தி கேரளா ஸ்டோரி’ உண்மை கதையா? ஆதாரத்தை காட்டுறவனுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் - ரூ.1 கோடி பரிசு அறிவிப்பு
தி கேரளா ஸ்டோரி படத்தின் கதை உண்மை என நிரூபிப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என கேரள முஸ்லீம் யூத் லீக் அறிவித்துள்ளது.

சினிமாவை பொறுத்தவரை சில படங்கள் ரிலீசான பின் சர்ச்சையில் சிக்கும், சில படங்களோ ரிலீசாகும் முன்பே சர்ச்சையில் சிக்குவதுண்டு, அப்படி ஒரு திரைப்படம் தான் ‘தி கேரளா ஸ்டோரி’. இந்தியில் உருவாகி உள்ள இப்படத்தை மேற்கு வங்கத்தை சேர்ந்த சுதிப்தோ சென் என்பவர் இயக்கி உள்ளார். இப்படத்தின் டீசர் ரிலீஸ் ஆனதில் இருந்தே இதற்கு எதிர்ப்பு கிளம்பிய வண்ணம் உள்ளது. இப்படம் வருகிற மே 5-ந் தேதி ரிலீசாக உள்ளது.
இப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்ப முக்கிய காரணம் இதன் கதை உண்மைக் கதை என படத்தில் குறிப்பிட்டுள்ளது தான். இதன் டிரைலரின் படி கேரளாவைச் சேர்ந்த 32 ஆயிரம் இந்து மற்றும் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த பெண்களை ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களை மதமாற்றம் செய்து ஐஎஸ்ஐஎஸ் என்கிற பயங்கரவாத அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளதை மையமாக வைத்து எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்... டூப் போடாமல் சண்டைக்காட்சிகளில் அதிரடி காட்டிய நடிகை லக்ஷ்மி மஞ்சு!
மதவாதம் இல்லாத மாநிலமாக இருக்கும் கேரளாவில் இதுபோன்று ஒரு பொய்யான சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறி மதக்கலவரத்தை தூண்ட முயல்வதாகவும், இப்படத்தை தடை செய்ய வேண்டும் எனவும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இது சங் பரிவாரின் கொள்கையை பரப்பும் விதமாக இப்படம் எடுக்கப்பட்டு உள்ளதாகவும், இதனை தடை செய்ய வேண்டும் எனவும் கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயனும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கேரளா முஸ்லீம் யூத் லீக் சார்பில் அதிரடி அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் தி கேரளா ஸ்டோரி படத்தில் சொல்லப்பட்டுள்ளது உண்மை என யாராவது நிரூபித்தால் அவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளது. இதுகுறித்து கேரளா முஸ்லீம் யூத் லீக்கின் பொதுச் செயலாளர் பி.கே. பிரோஸ் கூறுகையில், 32 ஆயிரம் பெண்களை மதமாற்றம் செய்ததாக கூறினால் கண்டிப்பாக ஒரு பஞ்சாயத்தில் இருந்து 30 பேராவது இருப்பார்கள். அவர்கள் ஒருவரின் அட்ரெஸ் கேட்டால் கூட உங்களுக்கு தெரியாது. ஆதலால் ஆதாரத்தை கொண்டு வருபவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளோம் என அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்... கவர்ச்சி உடையில்.. கையில் சரக்குடன் விவாகரத்தை கொண்டாடிய நடிகை!