MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு பின் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்தது ஏன்? மனம்திறந்த ராம்சரண் மனைவி

திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு பின் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்தது ஏன்? மனம்திறந்த ராம்சரண் மனைவி

ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாயகன் ராம்சரணின் மனைவி உபாசனா, திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு பின் கர்ப்பமானது ஏன் என்பது குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.

1 Min read
Author : Ganesh A
Published : Apr 04 2023, 09:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான ராம்சரண், தற்போது டோலிவுட்டின் டாப் ஹீரோவாக வலம் வந்துகொண்டிருக்கிறார். ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றிக்கு பின்னர் இவரின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது. தற்போது ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் எனும் பிரம்மாண்ட திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் ராம்சரண். இதுதவிர உப்பென்னா படத்தின் இயக்குனரின் புதிய படத்திலும் நடிக்க கமிட் ஆகி உள்ளார்.

24

ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் ராம்சரண் சினிமா வாழ்க்கையை போல் சொந்த வாழ்க்கையிலும் பல்வேறு நல்ல விஷயங்கள் நடந்துள்ளன. அதில் முக்கியமான ஒன்று தான் அவர் மனைவி உபாசனா கர்ப்பமானது. ராம்சரணுக்கும், உபாசனாவுக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. 10 ஆண்டுகளாக குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருந்து வந்த இந்த ஜோடி தற்போது தான் முதல் குழந்தையை வரவேற்க தயாராகி உள்ளது.

இதையும் படியுங்கள்... நடிகர் அஜித் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த மாஜி அமைச்சர்கள்... ஒரு மணிநேர சந்திப்பில் நடந்தது என்ன?

34

திருமணமாகி இவ்வளவு தாமதமாக குழந்தை பெற்றுக்கொள்ள அவர்கள் முடிவெடுத்தது ஏன் என்பது தான் பலரது கேள்வியாகவும் இருந்து வந்தது இதற்கு உபாசனா சமீபத்திய பேட்டியில் விளக்கம் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : “மற்றவர்கள் விருப்பத்திற்காக அல்லாமல் நாங்கள் விரும்பும்போது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என நாங்கள் முடிவெடுத்து அது நடந்துள்ளதால் நான் மிகவும் உற்சாகமாக உள்ளேன். 

44

திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு பின் நாங்கள் இந்த முடிவை எடுத்தது சிறப்பான ஒன்றாக கருதுகிறேன். ஏனெனில் தற்போது நாங்கள் இருவரும் வளர்ச்சியடைந்துவிட்டோம். பொருளாதார ரீதியாகவும் பாதுகாப்பாக இருக்கிறோம். இதுதான் சிறந்த நேரம். இது நாங்கள் இருவரும் எடுத்த பரஸ்பர முடிவு” என்று ராம்சரணின் மனைவி உபாசனா தெரிவித்துள்ளார். இந்த ஜோடி கடந்தாண்டு டிசம்பர் மாதம் தாங்கள் பெற்றோர் ஆக உள்ள தகவலை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... மினி கோடம்பாக்கமாக மாறிய சேப்பாக்கம்... சிஎஸ்கே மேட்சை பார்க்க இத்தனை சினிமா பிரபலங்கள் வந்திருந்தார்களா..!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ராம் சரண்

Latest Videos
Recommended Stories
Recommended image1
துபாயை ஆக்கிரமிக்கும் பாலிவுட்.! ஷாரூக், சல்மான் வரிசையில் வீடு வாங்கியுள்ள அந்த 9 இந்திய பிரபலங்கள்!
Recommended image2
கம்முன்னும், உம்முன்னும் இருக்கும் விஜய்.! இதுதான் காரணமாம்.! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.!
Recommended image3
உயிருக்கு போராடும் அண்ணாமலை.! மீனாவுக்கு சாபம் விடும் விஜயா.! சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved