நடிகர் அஜித் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த மாஜி அமைச்சர்கள்... ஒரு மணிநேர சந்திப்பில் நடந்தது என்ன?
முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்தின் வீட்டிற்கு சென்று, அவரை சந்தித்து பேசி உள்ளனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். அவரது தந்தை சுப்ரமணி கடந்த மாதம் உயிரிழந்தார். அஜித் தந்தையின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். குறிப்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர்கள் விஜய், சூர்யா, கார்த்தி, சிம்பு, சிவகார்த்திகேயன் ஆகியோர் நடிகர் அஜித்தின் வீட்டுக்கே சென்று அவருக்கு ஆறுதல் தெரிவித்துவிட்டு வந்தனர்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர்களான கடம்பூர் ராஜு மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்தின் வீட்டிற்கு சென்றனர். அப்போது அஜித்தை சந்தித்து அவரது தந்தையின் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்த அவர்கள், அஜித்துடன் ஒரு மணிநேரம் உரையாடியதாகவும் தெரிவித்துள்ளனர். அஜித்துடனான சந்திப்பு குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... மினி கோடம்பாக்கமாக மாறிய சேப்பாக்கம்... சிஎஸ்கே மேட்சை பார்க்க இத்தனை சினிமா பிரபலங்கள் வந்திருந்தார்களா..!
இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது : “தமிழ்த்திரையுலகின் மிகமுக்கியமான முன்னணி நடிகர் அஜித்குமார் அவர்களின் அன்புத் தந்தை மறைவையொட்டி மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் சார்பாக முன்னாள் அமைச்சர் அண்ணன் கடம்பூர் ராஜு அவர்களுடன் அவரது இல்லம் சென்று ஆறுதல் தெரிவித்தோம்.
கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நீடித்த அச்சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசுகிற வாய்ப்பு அமைந்தது. அனுபவமும், மனப்பக்குவமும் நிறைந்த அவருடைய பேச்சில் எதார்த்தமும் உண்மையும் பிறர்க்கு உதவ வேண்டுமென்கிற தூய மனமும் வெளிப்பட்டது மிகுந்த பாராட்டுக்குரியது. 'எண்ணம்போல் வாழ்க்கை, எண்ணம்போல் தான் வாழ்க்கை' அன்புத் தந்தையின் ஆசியோடு தொடர்க! வெல்க!” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... Watch : ‘விடுதலை’ சிங்கிள் ஷாட் ரெயில் விபத்து காட்சி... உருவானது எப்படி? - மிரள வைக்கும் மேக்கிங் வீடியோ இதோ