MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Visha Yoga Alert
House Construction Cost Ideas
OTT Release This Week
DA Hike
Today's Rasi Palan
FD Vs RD Rate Calculator
8th Pay Commission
Vakra Maha Yoga
Kitchen Sink Cleaning Tips
Train Lower Berth
8th Pay Commission Pension Revision Demands
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Cinema
  • ஆஸ்கர் ரேஸில் இணைந்த காந்தாரா... இறுதிச்சுற்றுக்கான பரிந்துரை பட்டியலில் RRR பாட்டு & செல்லோ ஷோ படம்

ஆஸ்கர் ரேஸில் இணைந்த காந்தாரா... இறுதிச்சுற்றுக்கான பரிந்துரை பட்டியலில் RRR பாட்டு & செல்லோ ஷோ படம்

95-வது ஆஸ்கர் விருது விழா வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ள நிலையில், அதன் இறுதிச்சுற்றுக்கான பரிந்துரை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. 

1 Min read
Author : Ganesh A
| Updated : Dec 22 2022, 11:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

சினிமா துறையில் உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது. ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த விருது நிகழ்ச்சிக்காக உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான திரைப்படங்கள் போட்டியிடும். ஆனால் இந்தியாவை பொறுத்தவரை ஆஸ்கர் என்பது எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது. ஏ.ஆர்.ரகுமான், ரசூல் பூக்குட்டி உள்ளிட்ட இந்தியர்கள் பிற நாட்டு படங்களுக்காக ஆஸ்கர் விருதை வென்றுள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

சமீபகாலமாக இந்திய படங்கள் அதிகளவில் ஆஸ்கர் விருதுக்கு தேர்வானாலும், இறுதிப்போட்டியில் அவை தோற்று விடுகின்றன. கடந்த ஆண்டு சூர்யாவின் சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் ஆகிய திரைப்படங்கள் இறுதிவரை சென்று ஆஸ்கர் வாய்ப்பை நழுவவிட்டன. இந்நிலையில், 95-வது ஆஸ்கர் விருது விழா அடுத்தாண்டு நடைபெற உள்ளது.

இதையும் படியுங்கள்... நயன்தாரா கூட படம் பாக்கலாம்னு கூப்பிட்டாங்க... ஆசைஆசையாய் போனேன் அசிங்கப்படுத்திட்டாங்க - ஜிபி முத்து

35

இதன் இறுதிச்சுற்றுக்கான பரிந்துரை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. அதில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டுக் கூத்து என்கிற பாடல் இடம்பெற்று உள்ளது. இந்த பிரிவில் மொத்தம் 81 பாடல்கள் போட்டியிட்டன. அதில் இருந்து அடுத்த லெவலுக்கு தேர்வாகி உள்ள 15 பாடல்களில் நாட்டு கூத்து பாடலும் ஒன்று.

45

அதேபோல் சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான பிரிவில் 92 நாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட படங்களில் இருந்து 15 படங்கள் இறுதிச் சுற்றுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெறும். அந்த 15 படங்களில் குஜராத்தி படமான செல்லோ ஷோவும்  (Last Film Show) தேர்வாகி உள்ளது. வருகிற 2023-ம் ஆண்டு மார்ச் 12-ந் தேதி ஆஸ்கர் விருது விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

55

அதேபோல் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழிந்த காந்தாரா திரைப்படமும் ஆஸ்கர் ரேஸில் கலந்துகொண்டுள்ளது. இதனை அப்படத்தின் தயாரிப்பாளர் உறுதி செய்துள்ளார்.

இதையும் படியுங்கள்... சாகுற நிலைமையில கூட மேக்-அப் போடுவீங்களானு கிண்டலடித்த நடிகை... கடுப்பாகி பதிலடி கொடுத்த நயன்தாரா

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ராஜமௌலி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Cinema : AI, சைபர் கிரைம், வைரஸ் என எதிர்காலத்தை முன்கூட்டியே பேசிய 8 தமிழ் படங்கள்!
Recommended image2
Bigg Boss : பிக் பாஸ் வீட்டில் நாக் அவுட் டாஸ்க்... ஆனந்தி உடன் அடிதடியில் இறங்கிய லட்சுமி பிரியாவால் பரபரப்பு
Recommended image3
Rashmika : நேஷனல் அவார்டை தட்டித்தூக்க ரெடியான ‘நேஷனல் கிரஷ்’ ராஷ்மிகா... பிரம்மாண்டமாக உருவாகும் பாடகியின் பயோபிக்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved