கலவையான சான்று பெற்ற ஆர்ஆர்ஆர்..ரன்னிங் டைம் தெரியுமா?..
விரைவில் வெளியாகவுள்ள ஆர்ஆர்ஆர் படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளுக்காக அயல்நாடு பறந்துள்ளது படக்குழு. இதற்கிடையே இந்த படத்திற்கான சென்சார் வேலைகள் முடிவடைந்துள்ளது.

RRR MOVIE
பாகுபலி தொடர்ந்து ராஜமௌலியின் அடுத்த படைப்பு ஆர்ஆர்ஆர். பாகுபலியை போலவே இந்த படமும் பேன் வேர்ல்ட் படமாக மாறும் என ரசிர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
RRR MOVIE
சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி உருவாக்கப்பட்டு உள்ளது ஆர்ஆர்ஆர். இந்த வீரர்களின் கதையில் ஈர்க்கப்பட்ட ராஜமௌலியின் புதிய முயற்சியே இந்த படம் .
RRR MOVIE
இந்த படத்தில் ராம் சரண் (Ram Charan), ஜூனியர் என்.டி.ஆர் ( Junior NTR), ஆலியா பட் (Alia Bhatt), சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, சமுத்திரக்கனி, அலிசான் டூடி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளளனர்.
தொடர்புடைய செய்திகளுக்கு....பீஸ்ட் ஆடியோ லாஞ்சுக்கு போட்டியாக ‘RRR’ படக்குழு ஏற்பாடு செய்த பிரம்மாண்ட விழா - மாஸ் காட்டப்போவது யார்?
RRR MOVIE
பாகுபலியை போலவே பிரமாண்ட செலவில் உருவாக்கியுள்ளது ஆர்ஆர்ஆர். சுமார் 350 கோடியிலிருந்து 400 கோடி வரையிலான செலவில் இந்த படம் தயராகியுள்ளதாம்.
RRR MOVIE
ஜனவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட ஆர்ஆர் ஆர் கொரோனா பரவல் காரணமாக தள்ளிப்போனது. இதையடுத்து வரும் மார்ச் 24-ம் தேதி இந்த படம் திரையிடப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
RRR MOVIE
இந்த படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகள் படு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக முன்பே உள்ளூரில் பத்திரிக்கையாளர் சந்திப்பு முடிந்துள்ளது. இதையடுத்து வெளிநாடுகளில் ப்ரோமோஷன் செய்து வருகிறது படக்குழு.
RRR MOVIE
இதற்கிடையே இந்த படத்திற்கான சென்சார் வேலைகள் முடிவடைந்துள்ளது. இதன் பிறகு இந்தப்படத்திற்கு யூ / ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.
RRR MOVIE
அதோடு ஆர் ஆர் ஆர் படத்தின் ரன்னிங் டைமும் வெளியாகியுள்ளது. சுமார் 3 மணிநேரம் 6 நிமிடம் 54 நொடி நேர நீளத்தை இந்த படம் கொண்டுள்ளது.
தொடர்புடைய செய்திகளுக்கு....Radhe shyam : எதிர்பார்த்த வசூல் இல்லை... பாக்ஸ் ஆபிஸில் காத்துவாங்கும் ராதே ஷ்யாம்! கலக்கத்தில் RRR படக்குழு