MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Radhe shyam : எதிர்பார்த்த வசூல் இல்லை... பாக்ஸ் ஆபிஸில் காத்துவாங்கும் ராதே ஷ்யாம்! கலக்கத்தில் RRR படக்குழு

Radhe shyam : எதிர்பார்த்த வசூல் இல்லை... பாக்ஸ் ஆபிஸில் காத்துவாங்கும் ராதே ஷ்யாம்! கலக்கத்தில் RRR படக்குழு

Radhe shyam :புஷ்பாவைப் போல் ராதே ஷ்யாமும் வசூலில் பட்டையை கிளப்பும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இப்படத்துக்கு தெலுங்கைத் தவிர பிற மொழிகளில் எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. 

1 Min read
Author : Ganesh A
Published : Mar 16 2022, 08:10 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

பான் இந்தியா படங்களுக்கு மவுசு

பாகுபலி படத்துக்கு பின்னர் பான் இந்தியா படங்களுக்கு பிற மொழிகளிலும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் தெலுங்கில் தயாராகும் பெரும்பாலான முன்னணி நடிகர்களின் படங்கள் பான் இந்தியா படங்களாகவே வெளியிடப்படுகின்றன. அண்மையில் கூட அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் வெளியான அனைத்து மொழிகளிலும் நல்ல வசூல் பார்த்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

பிரபாஸின் ராதே ஷ்யாம்

இதையடுத்து பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே கடந்த வாரம் பிரபாஸ் நடித்த ராதே ஷ்யாம் திரைப்படம் வெளியானது. பூஜா ஹெக்டே, சத்யராஜ் மற்றும் பலர் நடித்திருந்த இப்படத்தை ராதா கிருஷ்ண குமார் இயக்கி இருந்தார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியானது.

34

பெரும் நஷ்டம்

புஷ்பாவைப் போல் ராதே ஷ்யாமும் வசூலில் பட்டையை கிளப்பும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இப்படத்துக்கு தெலுங்கைத் தவிர பிற மொழிகளில் எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

44

கலக்கத்தில் ஆர்.ஆர்.ஆர்

பிரபாஸின் ராதே ஷ்யாம் படத்துக்கு பிற மொழிகளில் வரவேற்பு இல்லாதது அடுத்த வாரம் வெளியாக உள்ள ஆர்.ஆர்.ஆர் படக்குழுவை கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது. இப்படத்தின் கதைக்களம் தெலுங்குப் பிரதேசத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களைப் பற்றியது என்பதால், இதனை பிற மொழி ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்கிற குழப்பமும் எழுந்துள்ளது.  

இதையும் படியுங்கள்... sardar movie : அடேங்கப்பா... கார்த்தி படத்துக்கு இவ்வளவு மவுசா! ஷூட்டிங் முடியும் முன்பே கல்லாகட்டிய ‘சர்தார்’

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிரபாஸ்
ராஜமௌலி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Travel Movies : வீட்டிலிருந்தே உலகத்தை சுற்றிப் பார்க்க வைக்கும் 5 படங்கள்!
Recommended image2
Korean Movies : மனதை லேசாக்கும் 7 சூப்பர் ஹிட் கொரியன் திரைப்படங்கள்!
Recommended image3
OTT வேண்டாம்... மிரள வைக்கும் ட்விஸ்ட்களுடன் கூடிய இந்த தமிழ் வெப் சீரிஸை யூடியூப்பில் இலவசமா பார்க்கலாம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved