ஆர்ஆர்ஆர் ஹீரோசின் அதிரடி ..தெலுங்கு தேசம் வரை பரவிய நம்மவூர் இயக்குனரின் புகழ்
தமிழில் நடித்தால் இந்த இயக்குனருடன் தான் என சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆர் ஆர் ஆர் மூவி ஹீரோஸ் தடாலடியாக கூறியுள்ளனர்.

RRR
பாகுபலியை தொடர்ந்து ஆர் ஆர் ஆர் :
மிகவும் பிரபலமான இயக்குனர் ராஜமௌலி. இவர் மாவீரா, நான் ஈ, பாகுபலி என அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்களை இ உலகத்தரத்துக்கு உயர்த்தியவர் . பாகுபலி இரண்டு பாகங்களும் பிரமாண்ட வசூல் சாதனை படைத்தது. இதையடுத்து தற்போது ஆர்.ஆர்.ஆர். படத்தை உருவாக்கியுள்ளார்.
RRR
சுதந்திர போராட்டம் குறித்த கதை :
இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தந்திர போராட்ட வீரர்களான சீதாராம ராஜு மற்றும் கொமாரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ளது ஆர் ஆர் ஆர்.
RRR
நட்சத்திர பட்டாளம் :
இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், நடிகை ஆலியா பட், தமிழ் நடிகர் சமுத்திரக்கனி, ஹாலிவுட் நடிகை ஒலிவியா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தையே களமிறக்கி உள்ளார் ராஜமௌலி.
மேலும் செய்திகளுக்கு...RRR movie : ரிலீசுக்கு முன்பே பாகுபலி சாதனையை அடிச்சுதூக்கி கெத்து காட்டும் ‘ஆர்.ஆர்.ஆர்’
RRR
பிரமாண்ட தயாரிப்பு :
சுமார் 500 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படத்திற்கு மரகதமணி இசையமைத்துள்ளார்.. பொங்கல் ரேஸில் இருந்த இந்த படம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிப்போனது. இதையடுத்து வரும் மார்ச் 25-ம் தேதி படம் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் நாளை உலகமெங்கும் ரிலீசாக உள்ளது.
RRR
ப்ரோமோஷன் வேலைகள் :
ஜனவரியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் இந்த படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகள் அப்போதே நடந்து முடிந்து விட்டன. சென்னை,மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு பிரமாண்டமாக நடைபெற்றது.
RRR
பேட்டியளித்து வரும் டீம் :
ப்ரோமோஷனை தொடர்ந்து ஆர் ஆர் ஆர் படக்குழு சமூக ஊடகங்களில் அடிக்கடி தோன்றி வருகின்றனர். அவர்கள் கொடுக்கும் பேட்டியும் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தமிழ் இயக்குனர் குறித்து ஆர் ஆர் ஆர் நாயகர்கள் பேசியிருப்பது தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
vetrimaaran
நடித்தால் இவர் இயக்கத்தில் தான் :
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ராம் சரண், ஜூனியர் என் தி ஆர் இருவரிடமும் தமிழில் யார் இயக்கத்தில் தோன்ற விருப்பம் என கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த இவர்கள் நடித்தால் வெற்றி மாறன் இயக்கத்தில் தான் என கூறியுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு...கலவையான சான்று பெற்ற ஆர்ஆர்ஆர்..ரன்னிங் டைம் தெரியுமா?..
vetrimaaran
மிரள வைத்த அசுரன் :
அதோடு மேலும் பேசிய நாயகர்கள், கமர்ஷியல் கதையை மிகவும் சிறப்பாக இயக்குகிறார்.வெற்றி மாறன். இவர் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படத்தை பார்த்து மிரண்டு விட்டோம்..அதன்காரணமாகவே வெற்றி மாறன் இயக்கத்தில் நடிக்க ஆசை என கூறியுள்ளனர்.