- Home
- Cinema
- மார்க் ஆண்டனி படத்தில் ஒய்யாரமான நடிகையுடன் டூயட் பாட உள்ள விஷால்... இந்த ஜோடி சூப்பரா இருக்கே!
மார்க் ஆண்டனி படத்தில் ஒய்யாரமான நடிகையுடன் டூயட் பாட உள்ள விஷால்... இந்த ஜோடி சூப்பரா இருக்கே!
Mark Antony : ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் மார்க் ஆண்டனி படத்தில் ஹிரோயினாக நடிக்கப்போவது யார் என்பது குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான எனிமி, வீரமே வாகை சூடும் ஆகிய படங்கள் தோல்வியைத் தழுவின, இதன் காரணாமாக அடுத்ததாக நடிக்கும் படங்கள் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார் விஷால். தற்போது விஷால் கைவசம் லத்தி, மார்க் ஆண்டனி ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர துப்பறிவாளன் 2-ம் பாகத்தையும் இயக்க உள்ளார்.
இதில் லத்தி படத்தை புதுமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கி உள்ளார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்துள்ளார். நடிகர்கள் நந்தாவும், ரமணாவும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர் விஷால் போலீஸாக நடித்துள்ளார். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையடுத்து மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார் விஷால். இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் ஹீரோயின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி மார்க் ஆண்டனி படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை ரித்து வர்மா நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இவர் ஏற்கனவே தமிழில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், துருவ நட்சத்திரம் போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிகை ரித்து வர்மா ஒய்யாரமான நடிகை என்பதால் அவர் விஷாலுக்கு சரியான ஜோடியாக இருப்பார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்.... காதல்லாம் இல்லையாம்... அந்த ‘மேட்டர்’ லீக் ஆகிடக்கூடாதுனு ஹேம்நாத்துக்கு கழுத்தை நீட்டிய சித்ரா? - பகீர் தகவல்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.