- Home
- Cinema
- திரெளபதி 2 : மீண்டும் போர்க்களம் சென்றது போன்ற உணர்வை கொடுத்தது... ரிச்சர்டு ரிஷி பெருமிதம்
திரெளபதி 2 : மீண்டும் போர்க்களம் சென்றது போன்ற உணர்வை கொடுத்தது... ரிச்சர்டு ரிஷி பெருமிதம்
மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி உள்ள திரெளபதி 2 திரைப்படம் இந்த வாரம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அதன் அனுபவங்களை நடிகர் ரிச்சர்டு ரிஷி பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.

Richard Rishi says Draupathi 2 experience
10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் நடிகராக பயணித்து வரும் ரிச்சர்ட் ரிஷி, ஆரம்பத்தில் காதல் நாயகனாக அறிமுகமாகி, பின்னர் வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து தனது நடிப்பு திறமையை அடுத்தகட்டத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார். ஒவ்வொரு படத்திலும் புதிய முயற்சிகளை மேற்கொண்டு, தன்னை ஒரு திறமையான நடிகராக நிரூபித்து வந்த அவர், தற்போது முழுமையான வீரத் தோற்றத்தில் ரசிகர்களை சந்திக்கத் தயாராகி இருக்கிறார்.
அனுபவம் பகிர்ந்த ரிச்சர்டு ரிஷி
வரலாற்றுப் பின்னணியில் உருவாகியுள்ள ‘திரௌபதி 2’ திரைப்படத்தில், மன்னர் வீர சிம்ம கடவராயன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரிச்சர்ட் ரிஷி, இதை தனது திரைப்பயணத்தின் முக்கியமான மைல்கல்லாகக் கருதுகிறார். ஜனவரி 23ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இந்த படத்தைப் பற்றி அவர் பகிர்ந்துகொண்ட அனுபவங்கள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
“இந்த படம் ஒரு சாதாரண கதாபாத்திரம் அல்ல. தமிழ்நாட்டின் வீரமும் தியாகமும் நிறைந்த வரலாற்றை திரையில் உயிர்ப்பித்த அனுபவம் இது. ‘திரௌபதி 2’ எனக்கு நடிப்பைத் தாண்டி, வரலாற்றோடு இணைந்த ஒரு பயணம். இயக்குநர் மோகன் ஜியுடன் மீண்டும் பணியாற்றியது, நம்பிக்கையுள்ள தலைவருடன் மீண்டும் போர்க்களம் சென்றது போன்ற உணர்வை கொடுத்தது” என்று ரிச்சர்ட் ரிஷி கூறினார்.
திரெளபதி 2 எப்படி வந்துள்ளது?
மேலும் அவர், படத்தின் தொழில்நுட்ப அம்சங்களைப் பற்றியும் பேசினார். இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசை அரச காலத்தின் வீர உணர்வை வலிமையாக வெளிப்படுத்துகிறது என்றும், ஒளிப்பதிவாளர் பிலிப் கே. சுந்தரின் காட்சிகள் அரச கம்பீரத்தையும் பிரம்மாண்டத்தையும் அழகாகப் பதிவு செய்துள்ளன என்றும் தெரிவித்தார். ஆக்ஷன் சந்தோஷ் வடிவமைத்த போர் காட்சிகள், வரலாற்று காவியங்களுக்கு இணையான தரத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
திரெளபதி 2 அப்டேட்
ரக்ஷனா இந்துசூடன், நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்த அனுபவம் ஒவ்வொரு காட்சிக்கும் கூடுதல் வலிமை சேர்த்ததாகவும் ரிச்சர்ட் ரிஷி குறிப்பிட்டார். “இந்த படம் ஒரு வரலாற்றுத் திரைப்படமாக மட்டுமல்ல, நம் முன்னோர்களின் மறைந்துபோன போர்க்குரலை மீண்டும் கேட்கச் செய்யும் முயற்சியாகும்” என்றார்.
இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில், நேதாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் சோலா சக்கரவர்த்தி தயாரித்துள்ள ‘திரௌபதி 2’, தைரியமான கதைக்களம், வலுவான நடிப்பு, பிரம்மாண்டமான காட்சிகள் என அனைத்தையும் ஒருங்கிணைத்து, தமிழ் சினிமாவின் முக்கியமான வரலாற்றுக் காவியமாக உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

