மே 1ந் தேதி சூர்யாவின் ரெட்ரோ படத்துக்கு போட்டியாக இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
மே 1ந் தேதி உழைப்பாளர் தினத்தன்று விடுமுறை நாள் என்பதால் அன்றைய தினம் சூர்யாவின் ரெட்ரோ உள்பட அதனுடன் ரிலீஸ் ஆகும் படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

Theatre Release Tamil Movies on May 1 : ஏப்ரல் மாதம் தமிழ் சினிமாவுக்கு ஒரு வெற்றிகரமான மாதமாகவே அமைந்தது. ஏப்ரலில் அஜித்தின் குட் பேட் அக்லி, சுந்தர் சியின் கேங்கர்ஸ் என இரண்டு வெற்றிப்படங்கள் ரிலீஸ் ஆகி வசூல் வேட்டை ஆடின. இந்த நிலையில், மே மாதம் ஆரம்பமே அட்டகாசமாக தொடங்க உள்ளது. மே 1-ந் தேதி அரசு விடுமுறை தினம் என்பதால், அன்றைய தினம் ஏராளமான புதுப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. அது என்னென்ன படங்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Retro
ரெட்ரோ
சூர்யா நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் மே 1ந் தேதி தான் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், பிரகாஷ் ராஜ், நாசர், சிங்கம்புலி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தை சூர்யா - ஜோதிகாவின் 2 டி நிறுவனம் தான் தயாரித்து உள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இது சூர்யாவுக்கு கம்பேக் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tourist Family
டூரிஸ்ட் பேமிலி
ரெட்ரோ படத்துக்கு போட்டியாக தமிழில் ரிலீஸ் ஆகும் மற்றொரு திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி. இப்படமும் மே 1ந் தேதி தான் திரைக்கு வர உள்ளது. இப்படத்தை புதுமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் சசிகுமார் மற்றும் நடிகை சிம்ரன் கணவன், மனைவியாக நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்து உள்ளார்.
இதையும் படியுங்கள்... இலங்கை தமிழனாக மாறிய சசிகுமார் - வைரலாகும் டூரிஸ்ட் பேமிலி டிரெய்லர்
Nani starrer Hit 3
ஹிட் 3
மே 1ந் தேதி மற்றுமொரு பான் இந்தியா படம் ரிலீஸ் ஆக உள்ளது. அப்படத்தின் பெயர் ஹிட் 3. இப்படத்தை சைலேஷ் கொலானு இயக்கி உள்ளார். இப்படத்தில் நேச்சுரல் ஸ்டார் நானி ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அவருக்கு ஜோடியாக கேஜிஎஃப் ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். இப்படத்தில் நடிகர் கார்த்தியும் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற மே 1ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
Veeram
அஜித் படங்கள் ரீ-ரிலீஸ்
மே 1ந் தேதி நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாள் என்பதால், அன்றைய தினம் அஜித் நடித்த இரண்டு படங்கள் ரீ-ரிலீஸ் ஆக உள்ளன. அதில் ஒன்று கடந்த 2014-ம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வீரம் திரைப்படம். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். அதேபோல் 2007-ம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆன பில்லா திரைப்படமும் வருகிற மே 1ந் தேதி ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.
இதையும் படியுங்கள்... 10 ஆண்டுகளில் அஜித் படங்களின் வசூல்; மொத்தமே இவ்வளவுதானா? அதிர வைக்கும் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!