தியேட்டரில் கூட்டமின்றி காத்துவாங்கியதா ரெட்ரோ? பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் என்ன?
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி உள்ள ரெட்ரோ திரைப்படம் 3 நாட்களில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Retro Movie Box Office Collection : சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள புதிய படம் 'ரெட்ரோ'. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் மே 1 ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன், நாசர், பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர், தரக் பொன்னப்பன், தமிழ், கிருஷ்ணகுமார் பாலசுப்பிரமணியன், பிரேம் குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரேயஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
சூர்யா
ரெட்ரோ படக்குழு
ஜாக்கி மற்றும் மாயபாண்டி கலை இயக்குநர்களாக பணியாற்றியுள்ளனர். பிரவீன் ராஜ் ஆடை வடிவமைப்பாளராகவும், கேச்சா கம்ஃபக்டே சண்டைப்பயிற்சி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர். 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளராக ராஜசேகர் கர்ப்பூரசுந்தரபாண்டியன், கார்த்திகேயன் சந்தானம் உள்ளிட்டோர் பணியாற்றி உள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆனது.
பூஜா ஹெக்டே
ரெட்ரோ வசூல்
இப்படம் விமர்சன ரீதியாக சற்று கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி வருகிறது. அதன்படி ரிலீஸ் ஆன முதல் நாளே தமிழ்நாட்டில் மட்டும் ரெட்ரோ திரைப்படம் ரூ.17.75 கோடி வசூலித்து மாஸ் காட்டியது. பின்னர் இரண்டாம் நாளில் சரிவை சந்தித்தபோது அப்படம் தியேட்டரில் கூட்டமின்றி காத்துவாங்கி வருவதாக சிலர் சமூக வலைதளங்களில் விமர்சிக்க தொடங்கினர். இந்நிலையில், ரெட்ரோ திரைப்படம் மூன்றாம் நாளில் மீண்டும் பிக் அப் ஆகி உள்ளது. இப்படம் நேற்று மட்டும் உலகளவில் ரூ.10 கோடிக்கு மேல் வசூலித்து ஒட்டுமொத்தமாக 50 கோடி என்கிற இமாலய வசூலை மூன்று நாட்களில் எட்டி உள்ளது.
ரெட்ரோ சூர்யா
ரெட்ரோ பட்ஜெட்
ரெட்ரோ திரைப்படம் 65 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் இப்படம் இன்றும் வசூல் வேட்டையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமாக இன்றே போட்ட பட்ஜெட்டை விட கூடுதலாக ரெட்ரோ வசூலித்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் கங்குவா மூலம் படுதோல்வியை சந்தித்த சூர்யாவுக்கு ரெட்ரோ படத்தின் வெற்றி ஆறுதல் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.