சித்ராவின் காதலர் நல்லவனே இல்லை... பல பெண்களுடன் தொடர்பு..! புட்டு புட்டு வைத்த தோழி ரேகா நாயர்..!
First Published Dec 9, 2020, 9:02 PM IST
சின்னத்திரை வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள சித்ராவின் தற்கொலை குறித்தும், ஹேமந்தை பற்றியும்... சித்ராவின் நீண்ட நாள் தோழி ரேகா நாயர் வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தன்னுடைய தோழி குறித்து, பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள ரேகா... "சித்ரா ஆரம்ப காலத்தில் இருந்து மிகவும் கஷ்டப்பட்டு, சினிமா துறை மீது கொண்ட ஆர்வத்தால் மட்டுமே வளர்ந்தவர். அவர் இவ்வளவு பிரபலமாக இருந்த போதும் கூட, அவரது குடும்பத்தில் பெரிதாக உடன்பாடு இல்லை. எனினும் மகளின் ஆசைக்காக ஏற்று கொண்டனர்.

அதே போல், சித்ராவை பொறுத்தவரை அனைவருடனும் ஜாலியாக பேசுவார். யாரும் நெருங்கிய தோழர்கள் என்று சொல்லமுடியாது. என்னுடன் கூட சில விஷயங்களை மட்டுமே பகிர்ந்து கொள்வார். குறிப்பாக ஒரு மாதமாக அவர், சரியான மன நிலையில் இல்லை என்பது தெரியும். எப்போதும் போனை காதில் வைத்து கொண்டே இருப்பதை பார்த்திருக்கிறேன்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?