- Home
- Cinema
- Ravi Mohan : 3 எழுத்து இட்லி நடிகை... உனக்கு என்ன அருகதை இருக்கு என்ன பத்தி பேச - வெளுத்துவாங்கிய ரவி மோகன்
Ravi Mohan : 3 எழுத்து இட்லி நடிகை... உனக்கு என்ன அருகதை இருக்கு என்ன பத்தி பேச - வெளுத்துவாங்கிய ரவி மோகன்
Ravi Mohan Press Meet : நடிகர் ரவி மோகன் இன்று பிரஸ் மீட்டில் கண்ணீர் மல்க பேசினார். அப்போது விவாகரத்து கிடைக்கும் வரை தான் படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் அவர் கூறினார்.

Ravi Mohan Press Meet
நடிகர் ரவி மோகன் இன்று திடீரென பிரஸ் மீட் ஒன்றை நடத்தி, அதில் தன்னுடைய விவாகரத்து விவகாரம் பற்றியும், தான் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகள் பற்றியும் ஆக்ரோஷமாக பேசி உள்ளார். அவர் கண்ணீர் மல்க பேசிய வீடியோ காட்சிகள் இணையத்தில் படு வைரலாகி வருகிறது. மேலும் அந்த பிரஸ் மீட்டில், தன்னைப் பற்றி பேச 3 எழுத்து இட்லி நடிகைக்கு எந்த அருகதையும் இல்லை என ஆக்ரோஷமாக பேசி உள்ளார். அவர் என்ன பேசினார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

படத்தில் நடிக்க மாட்டேன்
விவாகரத்து பிரச்சனை முடியும் வரை எந்த படத்திலும் நடிக்க மாட்டேன் என நடிகர் ரவி மோகன் அதிரடி முடிவு எடுத்துள்ளார். மேலும், தன்னை தொடர்ந்து தொந்தரவு செய்யவோ, மிரட்டவோ வேண்டாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். யாருக்காவது பேச வேண்டுமெனில் நேரடியாக தனது அலுவலகத்திற்கே வரலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். தனது குழந்தைகளை பார்க்க கூட அனுமதி மறுக்கப்படுவதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்கு பாதுகாப்பு பணியாளர்கள் அனுப்பப்படுவதாகவும், தனது மொபைல் இணைப்பும் துண்டிக்கப்பட்டுவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
கெனிஷா பிரிந்தது ஏன்?
மேலும், கெனிஷா மீது சமூக வலைதளங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதனால் அவர் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். “அவர் எங்கு இருந்தாலும் அமைதியாகவும் சந்தோஷமாகவும் வாழ வேண்டும் என்பதே என் விருப்பம்” எனவும் தெரிவித்துள்ளார். தனது திரைப்படங்கள் இனி விவாகரத்து முடியும் வரை திரையரங்குகளில் வெளியாகாது என்றும், கடந்த சில ஆண்டுகளில் சந்தித்த அவமானங்களால் இனி நடிப்பைத் தொடர முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
ரவி மோகன் எச்சரிக்கை
“என்னை யாராவது தூண்ட முயன்றால் முயற்சி செய்து பாருங்கள். இந்த துறையில் நான் 23 ஆண்டுகள் உழைத்திருக்கிறேன்” என்று அவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், தனது திருமணம் கட்டாய சூழ்நிலையில்தான் நடந்தது என்றும், “தன்னை மிரட்டி திருமணம் செய்து கொண்டார்கள்” என்றும் குற்றம் சாட்டியுள்ளார். திருமணமான நாள் முதல் வாழ்க்கை நரகமாக மாறிவிட்டதாகவும், தன்னை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். “என் குழந்தைகள் இல்லாமல் என்னால் வாழ முடியவில்லை” என்று அவர் கூறி உள்ளார்.
3 எழுத்து இட்லி நடிகை
அதேபோல், சிலர் பி.ஆர் குழுக்களை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் தன்னை குறிவைத்து தாக்குவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், 3 எழுத்து இட்லி நடிகை ஒருத்தங்க இருக்காங்க. அவங்க ஜெனரேசன் நடிகர்கள் 3 பேர் என்கிட்ட சொன்னாங்க, என் வாழ்க்கையை கெடுக்க வந்த இவ அவனு அசிங்கமான வார்த்தையில் சொன்னார்கள். அப்படி 3 பேரு வாழ்க்கையை கெடுக்க ரெடியா இருந்த அந்த பொம்பள என் வாழ்க்கையை பத்தி பேசுறாங்க. வேற ஏதாவது பிரச்சனை வந்தா அப்படியே டிராமா பண்ணுவாங்க. உனக்கெல்லாம் என்னைப்பத்தி பேச ஏதாவது துப்பு இருக்கா. பர்சனல் லைஃப்ல இவன் தப்பான மனுஷன்னு பேசுன இன்னொரு தடவ அவ்வளவுதான். உனக்கு என்ன அருகதை இருக்கு என்னை பத்தி பேச என ஆவேசமாக அந்த நடிகைக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

