- Home
- Cinema
- This Week OTT Releases : மே 18 முதல் 24 வரை இந்த வாரம் ஓடிடியில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் இதோ
This Week OTT Releases : மே 18 முதல் 24 வரை இந்த வாரம் ஓடிடியில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் இதோ
OTT Release Movies and web Series : இந்த வாரம் தியேட்டரைக் காட்டிலும் ஓடிடி-யில் தான் அதிக படங்கள் போட்டிபோட்டு ரிலீஸ் ஆக உள்ளன. அது என்னென்ன படங்கள் என்பதை விரிவாக பார்க்கலாம்.

OTT Release Movies and web Series
தியேட்டர்களை எல்லாம் கருப்பு திரைப்படம் ஆக்கிரமித்துள்ளதால் இந்த வாரம் பெரியளவில் தமிழ் படங்கள் திரைக்கு வரவில்லை. இருப்பினும் இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் விருந்து காத்திருக்கிறது. கோர்ட் ரூம் த்ரில்லர், ஹாரர், ஆக்ஷன், ரியாலிட்டி ஷோ, காமெடி சீரிஸ் என பல ஜானர்களில் புதுப் படங்கள் மற்றும் சீரிஸ்கள் வெளியாக உள்ளன. ஜோதிகா, சோனாக்ஷி சின்ஹா நடித்த 'சிஸ்டம்' கோர்ட் ரூம் த்ரில்லர் படத்துடன் இன்னும் பல படங்கள் வெளியாகின்றன. அது என்னென்ன என்பதை பார்க்கலாம்.

இந்த வார ஓடிடி வெளியீடுகள்
வாரன்ட் (Warrant)
இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ள தமிழ் சீரிஸ் 'வாரன்ட்'. ஒரு சப்-ஆர்டினேட் போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து இந்த க்ரைம் டிராமா நகர்கிறது. ஜீ5 ரிலீஸ் தேதி: மே 24
Desi Bling
நிஜ ஜோடியான கரண் குந்த்ரா, தேஜஸ்வி பிரகாஷ் பங்கேற்கும் ரியாலிட்டி ஷோ 'தேசி பிளிங்'. கோடீஸ்வரர்களின் வாழ்க்கை, சமூகப் போட்டிகள், கிளாமர் பார்ட்டிகளுக்கு இடையே நடக்கும் டிராமாவை இந்த சீரிஸ் காட்டுகிறது. நெட்பிளிக்ஸ் ஓடிடியில் மே 20ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
The Boroughs
'தி பரோஸ்' ஒரு சை-ஃபை த்ரில்லர். ஓய்வூதியர்கள் வசிக்கும் ஒரு கம்யூனிட்டியில் கதை நடக்கிறது. அமைதியாக வாழும் முதியவர்களின் வாழ்க்கையில் ஒரு மர்ம சக்தி நுழைந்த பிறகு, கதை சுவாரஸ்யமான திருப்பங்களை எடுக்கிறது. மே 21ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது.
ஓடிடியில் புதுவரவு
சிஸ்டம் (System)
சோனாக்ஷி சின்ஹா, ஜோதிகா நடிக்கும் கோர்ட் ரூம் த்ரில்லர் 'சிஸ்டம்'. ஒரு பப்ளிக் பிராசிகியூட்டர் மற்றும் கோர்ட் ஸ்டெனோகிராஃபர் இடையே உருவாகும் பிணைப்பைச் சுற்றி கதை நகர்கிறது. அப்பா-மகள் கோர்ட்டில் நேருக்கு நேர் நிற்கும் வழக்குதான் படத்தின் முக்கிய அமேசான் பிரைம் வீடியோவில் மே 22 அன்று ரிலீஸ் ஆகிறது.
Ladies First
சாஷா பேரன் கோஹன், ரோசமண்ட் பைக் நடிக்கும் 'லேடீஸ் ஃபர்ஸ்ட்' ஒரு ஃபேண்டஸி காமெடி டிராமா. பெண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் ஒரு மாற்று உலகில் ஒரு பிளேபாய் சிக்கிக்கொள்வதுதான் கதை. மே 22ந் தேதி நெட்பிளிக்ஸில் ரிலீஸ் ஆக உள்ளது.
GOAT
கோட் ஒரு அனிமேஷன் ஆக்ஷன் காமெடி. எல்லா விலங்குகளும் ஒன்றாக வாழும் உலகில் கதை நடக்கிறது. வில் என்ற ஒரு சின்ன ஆட்டுக்குட்டி, பெரிய விளையாட்டு வீரராக வேண்டும் என்ற கனவோடு புரொஃபஷனல் ஸ்போர்ட்ஸில் நுழைகிறது. மே 24 அன்று நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது.
Bad Thoughts 2
காமெடியன் டாம் செகுரா நடிக்கும் டார்க் காமெடி சீரிஸ் 'பேட் தாட்ஸ்'. இதன் இரண்டாவது சீசன் மீண்டும் வருகிறது. இந்த சீசன் விசித்திரமான சூழ்நிலைகள் மற்றும் எதிர்பாராத சம்பவங்கள் நிறைந்ததாக இருக்கும். நெட்பிளிக்ஸ் ஓடிடியில் மே 24ந் தேதி அன்று ரிலீஸ் ஆக உள்ளது.
ஓடிடியில் இந்த வாரம்
Satan The Dark
'சாத்தான் தி டார்க்' ஒரு ஹாரர் ஜானர் தமிழ் படம். சாந்தினி தமிழரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தியேட்டர்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம், இப்போது ஓடிடியில் பல மொழிகளில் வெளியாகிறது. அமேசான் பிரைம், ஆஹா தமிழ் ஆகிய இரு ஓடிடி தளங்களில் மே 18 அன்று ரிலீஸ் ஆகிறது.
Jack Ryan: Ghost War
ஜான் கிரசின்ஸ்கி நடிக்கும் 'ஜாக் ரியான்: கோஸ்ட் வார்' ஒரு ஆக்ஷன் த்ரில்லர். சிஐஏ ஆபரேஷன்களில் நடக்கும் துரோகம், சதி மற்றும் கடந்த கால ரகசியங்களைச் சுற்றி கதை நகர்கிறது. அமேசான் பிரைம் ஓடிடியில் மே 20ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
Married To The Game 2
பிரபல கால்பந்து வீரர்களின் மனைவிகள் மற்றும் தோழிகளின் வாழ்க்கையைச் சுற்றியுள்ள ரியாலிட்டி டாக்குசீரிஸ் 'மேரிட் டு தி கேம்'. இதன் இரண்டாவது சீசன் இந்த வாரம் வெளியாகிறது. மே 20 அன்று அமேசான் பிரைமில் ரிலீஸ் ஆக உள்ளது.
Madhuvidhu
'மதுவிது' ஒரு மலையாள ரொமான்டிக் காமெடி. குடும்பப் பின்னணியில் உருவாகியுள்ளது. அடுத்தடுத்து திருமண முயற்சிகள் தோல்வியடையும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் காதல் எப்படி நுழைகிறது என்பதுதான் கதை. மே 22 அன்று சோனி லிவ் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது.
SkyMed 4
ஏர் ஆம்புலன்ஸ் ஊழியர்களின் வாழ்க்கையைச் சுற்றியுள்ள டிராமா சீரிஸ் 'ஸ்கைமெட்'. இதன் நான்காவது சீசன் இந்த வாரம் வெளியாகிறது. புதிய பைலட்கள் மற்றும் மருத்துவர்களின் வருகையால் குழுவில் ஏற்படும் மாற்றங்கள் கதையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் மே 22ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

