MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Dhurandhar 2 OTT: தியேட்டரில் இல்லாத சீன்களுடன் சர்ப்ரைஸ்.. குறித்த தேதிக்கு முன்பே ஓடிடியில் துரந்தர் 2

Dhurandhar 2 OTT: தியேட்டரில் இல்லாத சீன்களுடன் சர்ப்ரைஸ்.. குறித்த தேதிக்கு முன்பே ஓடிடியில் துரந்தர் 2

ரன்வீர் சிங் நடித்த ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான துரந்தர் 2 மாபெரும் வெற்றி பெற்ற பிறகு தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் அன்கட் வெர்ஷனில் கூடுதல் காட்சிகள் சேர்க்கப்பட்டு, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

2 Min read
Author : Raghupati R
Published : May 15 2026, 04:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
துரந்தர் 2 ஓடிடி வெளியீடு
Image Credit : X

துரந்தர் 2 ஓடிடி வெளியீடு

துரந்தர் 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியான நாளிலிருந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் ஆதித்யா தார் இயக்கிய இந்த ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர், ரன்வீர் சிங்கின் அதிரடி நடிப்பால் பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகள் படைத்தது. மார்ச் 19 அன்று வெளியான இந்தப் படம், முதல் காட்சியிலிருந்தே ரசிகர்களை திரையரங்குகளுக்கு இழுத்துச் சென்றது. தற்போது, ​​தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிய இந்தப் படம் ஓடிடி தளங்களிலும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
துரந்தர் 2 திரைப்படம்
Image Credit : Jio Studios

துரந்தர் 2 திரைப்படம்

முதலில் இந்த படம் மே 15 முதல் ஓடிடியில் வெளியாகும் என தகவல் வெளியானது. ஆனால் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில், ஒரு நாள் முன்னதாகவே மே 14 இரவு முதல் ஸ்ட்ரீமிங் தொடங்கப்பட்டது. இந்தியாவில் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்திலும், வெளிநாடுகளில் நெட்ப்ளிக்ஸ் தளத்திலும் படம் வெளியிடப்பட்டுள்ளது. தியேட்டரில் பார்க்க முடியாமல் தவறவிட்ட ரசிகர்கள், தற்போது வீட்டிலிருந்தபடியே படத்தை ரசிக்க தொடங்கியுள்ளனர்.

Related Articles

Related image1
Karuppu Review : சூர்யாவின் கருப்பு பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
Related image2
Now Playing
மதுரையில் உற்சாகம் | சூர்யா நடிப்பில் உருவான ‘கருப்பு’ திரைப்படம் பிரம்மாண்ட கொண்டாடிய ரசிகர்கள் !
35
அன்கட் வெர்ஷன் வெளியானது
Image Credit : X

அன்கட் வெர்ஷன் வெளியானது

இந்த ஓடிடி வெளியீட்டின் முக்கிய அம்சமாக, ‘அன்கட் வெர்ஷன்’ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. திரையரங்குகளில் இடம்பெறாத சில காட்சிகள் மற்றும் கூடுதல் வசனங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. அதனால் ஓடிடி வெர்ஷன் இன்று அதிக சஸ்பென்ஸ் மற்றும் விறுவிறுப்புடன் இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். தியேட்டரில் 3 மணி 49 நிமிடங்கள் ஓடிய படம், ஓடிடியில் சுமார் 3 மணி 52 நிமிடங்கள் ஓடுகிறது.

45
துரந்தர் 2 வசூல்
Image Credit : X

துரந்தர் 2 வசூல்

பாக்ஸ் ஆபிஸிலும் துரந்தர் 2 மாபெரும் வசூல் சாதனையை பதிவு செய்துள்ளது. வெளியான முதல் வார இறுதியில் மட்டுமே நூற்றுக்கணக்கான கோடிகளை வசூலித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. தொடர்ந்து பல வாரங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய இந்தப் படம், இந்தியாவில் மட்டும் ஆயிரம் கோடியை தாண்டிய வசூலை எட்டியுள்ளது. உலகளாவிய அளவிலும் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று, 1700 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

55
துரந்தர் 2
Image Credit : X

துரந்தர் 2

57 நாட்களாக தொடர்ந்து ஓடி வரும் இந்தப் படத்தின் வசூல் தற்போது கோடிக்கணக்கில் இருந்து லட்சங்களாக குறைந்திருந்தாலும், ரசிகர்களின் ஆதரவு தொடர்கிறது. குறிப்பாக ரன்வீர் சிங்கின் அதிரடி காட்சிகள், ஸ்பை திரில்லர் பாணி, பின்னணி இசை மற்றும் திரைக்கதை ஆகியவை ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளன. தியேட்டர்களில் சாதனை படைத்த இந்த திரைப்படம், தற்போது ஓடிடியிலும் புதிய வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சினிமா
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pavazha Malli : அடிபொலி ஹிட் அடித்த பவழ மல்லி பாடல்... வாரி சுருட்டிய வசூல் இத்தனை கோடியா?
Recommended image2
Roja Selvamani: எந்த ஹீரோவும் என்கிட்டே நெருங்க கூட இல்ல.! அதுக்கு காரணம் என்ன தெரியுமா? பல ஆண்டுகளுக்குப் உண்மைகளை போட்டு உடைத்த நடிகை ரோஜா.!
Recommended image3
Athiradi : சரவெடியாக உள்ளதா பேசில் ஜோசப்பின் ‘அதிரடி’ திரைப்படம்? விமர்சனம் இதோ
Related Stories
Recommended image1
Karuppu Review : சூர்யாவின் கருப்பு பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Now Playing
மதுரையில் உற்சாகம் | சூர்யா நடிப்பில் உருவான ‘கருப்பு’ திரைப்படம் பிரம்மாண்ட கொண்டாடிய ரசிகர்கள் !
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved