MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சூப்பரான கதை..ஆனா தியேட்டர்ல காலி சீட்; OTT-க்கு பார்சல் கட்டப்பட்ட சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம் Masthishka Maranam!

சூப்பரான கதை..ஆனா தியேட்டர்ல காலி சீட்; OTT-க்கு பார்சல் கட்டப்பட்ட சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம் Masthishka Maranam!

Masthishka Maranam Movie Box Office Failure : 2046-ல் நடப்பது போன்ற கதைக்களத்துடன் உருவான சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம் ஒன்று நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக உள்ளது. என்னதான் பாசிட்டிவ் விமர்சனங்களை எதிர்கொண்டாலும் படத்திற்கு வசூல் இல்லை.

2 Min read
Author : Rsiva kumar
Published : Mar 26 2026, 09:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
OTT க்கு பார்சல் கட்டப்பட்ட சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம் Masthishka Maranam!
Image Credit : Youtube

OTT-க்கு பார்சல் கட்டப்பட்ட சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம் Masthishka Maranam!

இயக்குஅர் கிரிஷாந்த் இயக்கத்தில் உருவான மலையாள படம் தான் மஸ்திஷ்க மரணம்: சைமன்ஸ் மெமரீஸ்' படம். இது ஒரு சயின்ஸ் ஃபிக்‌ஷன் இன்வெஸ்டிகேஷன் காமெடி ஜானர் படம். கடந்த மாதம் 27-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸான இந்தப் படம், ஒரு மாதத்திற்குப் பிறகு இப்போது ஓடிடி-க்கு வருகிறது. பிரபல ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸில் இந்தப் படம் வெளியாக உள்ளது. ஆனால், ஓடிடி ரிலீஸ் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

கண்ணதாசனின் கடைசி மூச்சு.. இளையராஜாவின் அழியாத இசை! - ‘கண்ணே கலைமானே’ உருவான கதை!

24
விமர்சனம் வந்த அளவுக்கு கூட வசூல் இல்லை
Image Credit : Asianet News, Ajith Vinayaka Films, Cinehoods

விமர்சனம் வந்த அளவுக்கு கூட வசூல் இல்லை

அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் பேனரில் விநாயகா அஜித் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். 'மஸ்திஷ்க மரணம் - எ ஃபிராங்கன்பைட்டிங் ஆஃப் சைமன்ஸ் மெமரீஸ்' என்பதுதான் இந்தப் படத்தின் முழுப் பெயர். ஏற்கெனவே சூப்பர் ஹிட்டான 'ஆவாசவ்யூஹம்', 'புருஷ பிரேதம்' படங்களுக்குப் பிறகு கிரிஷாந்த் இயக்கியிருக்கும் படம் இது. 'ககனச்சாரி' படத்தைத் தொடர்ந்து அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் மற்றும் கிரிஷாந்த் ஃபிலிம்ஸ் இணையும் இரண்டாவது சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம் இதுவாகும்.

34
ரஜிஷா விஜயனின் 'மஸ்திஷ்க மரணம்
Image Credit : Saregama Malayalam

ரஜிஷா விஜயனின் 'மஸ்திஷ்க மரணம்

கதை என்னவோ இன்னும் 20 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 2046ல் நடப்பது போன்ற ஒரு சயின்ஸ் ஃபிக்‌ஷன் இன்வெஸ்டிகேஷன் காமெடி படம். உள்ளூர் பின்னணியில், ஆனால் சயின்ஸ் ஃபிக்‌ஷனுக்கே உரிய ஒருவித 'மேட்னஸ்' கலந்து இந்தக் கதையைச் சொல்லியிருக்கிறார்கள். ஒரு ஃபியூச்சரிஸ்டிக் நியோ-Noir மூடைப் பின்பற்றும் இந்தப் படத்திற்கு, சர்வதேச சினிமா தரத்தில் விஷுவல்ஸ் அமைந்துள்ளது. 2046-ல் இருக்கும் கொச்சி நகரத்தை (நியோ கொச்சி) மையமாக வைத்து கதை நகர்கிறது. படத்தின் மேக்கிங் ஸ்டைலும், கதை சொல்லும் விதமும் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. VFX-க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படத்தை எடுத்துள்ளனர்.

44
Rajisha Vijayan Masthishka Maranam movie box office collection
Image Credit : Ajith Vinayaka Films

Rajisha Vijayan Masthishka Maranam movie box office collection

இந்தப் படத்தில் வரும் "கோமள தாமரை" என்ற பாடல் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. நடிகை ரஜிஷா விஜயன் முதல் முறையாக நடனமாடிய இந்தப் பாடல், பெரிய அளவில் பேசப்பட்டது. 'பிளேட் ரன்னர்' போன்ற படங்களைப் போல ஒரு தனித்துவமான கதை உலகத்தை இந்தப் படத்தின் மூலம் உருவாக்குவதாகவும், இதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா
திரைப்படம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
கண்ணதாசனின் கடைசி மூச்சு.. இளையராஜாவின் அழியாத இசை! - ‘கண்ணே கலைமானே’ உருவான கதை!
Recommended image2
Now Playing
இசைக் கருவிகளே இல்லாம இளையராஜா இசையமைத்த பாடலா இது? இவ்ளோ நாள் இதுதெரியாம போச்சே!
Recommended image3
ரேவதியை காப்பாற்ற ஏன் ஆம்புலன்ஸ் வரவில்லை: இயக்குநர் வச்ச பெரிய டுவிஸ்ட் – கார்த்திகை தீபம் சீரியல் பகீர் ரகசியம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved