மீண்டும் மீண்டுமா! அறிக்கை விட்ட ஆர்த்தியை வெறுப்பேற்ற ஜெயம் ரவி செய்த செயல்
நடிகர் ரவி மோகன் குறித்து ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரவி மோகன் ஒரு செயலை செய்திருக்கிறார்.

Ravi Mohan Befitting Reply to Aarti
நடிகர் ரவி மோகன், ஆர்த்தி ரவி என்பவரை கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடி 15 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பின் கடந்த ஆண்டு விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக அறிவித்தது. இவர்களின் விவாகரத்து முடிவு ஒட்டுமொத்த கோலிவுட்டையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவர்களின் விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. சமாதானப் பேச்சும் மறுபுறம் நடைபெறுவதாக கூறப்பட்டது.
ரவி மோகன் - கெனிஷா ஜோடி
ஆனால் ஆர்த்தி உடன் விவாகரத்து பெறும் முடிவில் தீர்க்கமாக உள்ளார் ரவி மோகன். அண்மையில் நடைபெற்ற தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் ப்ரீத்தா திருமணத்தில் பாடகி கெனிஷா உடன் வந்து ரவி மோகன் கலந்துகொண்டதால், அவர் அடுத்த திருமணத்துக்கு ரெடியாகிவிட்டதை சூசகமாக அறிவித்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் பேசின. மறுபுறம் ரவி மோகனின் இந்த முடிவால் அப்செட் ஆன ஆர்த்தி இரண்டு பக்கங்களுக்கு நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
ஆர்த்தி ரவி ஆதங்கம்
அதில் தன் பக்கம் உள்ள நியாயங்களை எடுத்துக் கூறிய அவர், ஓராண்டாக தன் மகன்களுக்காக அமைதி காத்து வந்ததாக கூறினார். மேலும் ரவி மோகன் புது உறவை பற்றி விமர்சித்த ஆர்த்தி, தான் ஓராண்டாக சந்தித்து வந்த வலியையும், வேதனையும் விவரித்து இருந்தார். ஆர்த்தியின் இந்த கண்ணீர் பதிவுக்கு நடிகைகள் குஷ்பூ, ராதிகா உள்ளிட்டோர் லைக் செய்திருந்தனர். ஆர்த்தியின் இந்த பதிவுக்கு பின் ரவி மோகனை ஏராளமானோர் விமர்சித்தும் வந்தனர்.
ஆர்த்திக்கு பதிலடி கொடுத்த ரவி மோகன்
தன்னை விமர்சித்து அறிக்கை வெளியிட்டு அறிக்கை வெளியிட்ட ஆர்த்திக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மீண்டும் ஒரு செயலை செய்திருக்கிறார் ரவி மோகன். அதன்படி, ஐசரி கணேஷ் மகள் ப்ரீத்தாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று இரவு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள மீண்டும் கெனிஷா உடன் ஜோடியாக வந்திருந்தார் ரவி மோகன். இதைப்பார்த்த நெட்டிசன்கள் அவர் பிரச்சனைகளை லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்து வருகிறார் என்று கூறி வருகின்றனர்.
விரைவில் மறுமணம் செய்யும் ரவி மோகன்?
திருமணத்துக்கு கெனிஷா உடன் வந்ததே பேசு பொருள் ஆன நிலையில், தற்போது மீண்டும் ஒருமுறை இருவரும் ஜோடியாக வந்து தங்கள் ரிலேஷன்ஷிப்பை உறுதி செய்துள்ளனர். இதன்மூலம் விரைவில் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆர்த்தி உடனான விவாகரத்துக்கு பின் ரவி மோகன் - கெனிஷா ஜோடியின் திருமணம் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.