- Home
- Cinema
- விஜய் தேவரகொண்டாவுடன் மாலத்தீவுக்கு சென்ற ராஷ்மிகா... வைரல் புகைப்படங்களால் மீண்டும் கிளம்பிய காதல் சர்ச்சை
விஜய் தேவரகொண்டாவுடன் மாலத்தீவுக்கு சென்ற ராஷ்மிகா... வைரல் புகைப்படங்களால் மீண்டும் கிளம்பிய காதல் சர்ச்சை
நடிகர் விஜய் தேவரகொண்டாவும், நடிகை ராஷ்மிகா மந்தனாவும் ஜோடியாக மாலத்தீவுக்கு விடுமுறையை கொண்டாட சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவும், நடிகை ராஷ்மிகா மந்தனாவும், கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் பேமஸ் ஆகினர். இந்த இரண்டு படங்களுமே வெற்றியடைந்ததற்கு இவர்களது கெமிஸ்ட்ரியும் ஒரு காரணம். இதையடுத்து இவர்கள் இருவரும் காதலிப்பதாக தகவல் பரவியது.
பின்னர் இருவரும் இதனை மறுத்தாலும், அடிக்கடி இவர்கள் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களும் வீடியோக்களும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது இருவரும் ஜோடியாக மாலத்தீவுக்கு விடுமுறையை கொண்டாட சென்றுள்ளனர். இதற்காக தனித்தனியே விமான நிலையம் வந்த இந்த ஜோடி ஒரே விமானத்தின் மாலத்தீவுக்கு சென்றது.
இதையும் படியுங்கள்... அரவிந்த்சாமியின் ரெண்டகம்... படத்திற்கு தடை விதித்த உயர்நீதிமன்றம்
இதனால் இவர்களைப் பற்றிய காதல் சர்ச்சை மீண்டும் கிளம்பி உள்ளது. நடிகை ராஷ்மிகா நடிப்பில் தற்போது குட் பாய் என்கிற பாலிவுட் படம் தயாராகி உள்ளது. இதற்காக கடந்த சில தினங்களாக புரமோஷன் பணிகளில் பிசியாக இருந்த ராஷ்மிகா, இன்று அப்படம் ரிலீஸ் ஆனதை அடுத்து சற்று ஓய்வெடுப்பதற்காக மாலத்தீவுக்கு சென்றுள்ளார்.
மறுபுறம் நடிகர் விஜய் தேவரகொண்டாவும், குஷி என்கிற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். சிவா நிர்வாணா இயக்கும் இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக இடைவிடாமல் நடைபெற்று வந்த நிலையில், அதிலிருந்து சற்று ஓய்வெடுப்பதற்காக விஜய் தேவரகொண்டாவும் மாலத்தீவுக்கு சென்றுள்ளார்.
இதையும் படியுங்கள்... ‘வந்தியத்தேவன்’ கார்த்தி பாடிய குத்துப்பாட்டு கேட்க ரெடியா...! சர்தார் படத்தின் மாஸ் அப்டேட் வந்தாச்சு