காதலிக்க நேரமில்லை... விஜய் தேவரகொண்டா உடனான காதல் சர்ச்சை குறித்து மனம்திறந்த ராஷ்மிகா
Rashmika : விஜய் தேவரகொண்டா உடன் தொடர்ந்து இரண்டு படங்களில் ஜோடி சேர்ந்து நடித்ததால் நடிகை ரஷ்மிகா அவரை காதலிப்பதாக சர்ச்சையும் எழுந்தது.

நடிகை ராஷ்மிகா மந்தனா, கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி படம் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் கன்னடத்தில் அறிமுகமாகி இருந்தாலும் இவரை பேமஸ் ஆக்கியது தெலுங்கு படங்கள் தான். தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியதோடு, அவருக்கான ரசிகர் வட்டத்தையும் பெரிதாக்கியது.
மேற்கண்ட இரண்டு படங்களிலும் ராஷ்மிகாவுக்கு ஜோடியாக நடித்திருந்தது விஜய் தேவரகொண்டா. இந்த இரண்டு படங்களும் ஹிட் ஆனதற்கு இவர்களின் கெமிஸ்ட்ரியும் ஒரு காரணமாக இருந்தது. தொடர்ந்து இரண்டு படங்களில் ஜோடி சேர்ந்து நடித்ததால் ரஷ்மிகா - விஜய் தேவரகொண்டா இடையே காதல் மலர்ந்ததாக சர்ச்சையும் எழுந்தது.
இதையும் படியுங்கள்... அட்டகாசமான போட்டியாளர்களுடன் அமர்களமான ஆரம்பம்... தெறிக்கவிடும் கமல்ஹாசனின் ‘பிக்பாஸ் 6’ புரோமோ இதோ
இதற்கு இருவருமே மறுப்பு தெரிவித்திருந்தாலும், இந்த சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. ஏனெனில் இவர்கள் இருவரும் அடிக்கடி ஜோடியாக ஊர்சுற்றி வருகின்றனர். தற்போது கூட இருவரும் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு தான் சோலோவாக எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வரும் ராஷ்மிகாவிடம் விஜய் தேவரகொண்டா எங்கே என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க தன்னை பற்றிய காதல் சர்ச்சை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார் ராஷ்மிகா. அவர் கூறியதாவது : “காதலித்தால் அதற்காக நிறைய நேரம் செலவிட வேண்டும். தற்போது அதற்கெல்லாம் எனக்கு நேரமே இல்லை. தற்போதைய சூழலில் எனது குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் இருக்கவே எனக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. அப்படி இருக்கும்போது காதல் சான்ஸே இல்ல. ஒருவேளை எதிர்காலத்தில் காதல் வந்தால் கண்டிப்பா சொல்றேன்” என கூலாக பதிலளித்துள்ளார் ராஷ்மிகா.
இதையும் படியுங்கள்... ‘பிக்பாஸ் 6’ இன்னும் தொடங்கவே இல்ல... அதற்குள் Army-யா! நெட்டிசன்களால் கொண்டாடப்படும் இலங்கை பெண் போட்டியாளர்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.